உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.இ., நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு கவுன்சிலிங்

பி.இ., நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு கவுன்சிலிங்

காரைக்குடி : பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங், வரும் 14ம் தேதி காரைக்குடியில் துவங்குகிறதென, அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மாலா தெரிவித்தார்.அவர் கூறுகையில்,'' பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங், வரும் 14ல் துவங்கி, ஆக.,6 வரை நடக்கிறது. மாநில அளவில் உள்ள 6 அரசு கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள் உட்பட 239 கல்லூரிகளில் காலியாக உள்ள 24,000 இடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. நேரடி 2 ம் ஆண்டு சேர்க்கைக்கு 26,000 பேர் விண்ணப்பித்தனர். ஜூலை 14 ல் காலை 9 மணிக்கு பி.எஸ்சி., மாணவர்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும்.

ஜூலை 15 ல் காலை 8 மணிக்கு கெமிக்கல் பிரிவு, காலை 10 மணிக்கு டெக்ஸ்டைல் லெதர் பிரிண்ட்டிங் பிரிவு, பகல் 12 மணி முதல் ஜூலை 17 வரை சிவில் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும். ஜூலை 17 ல் பிற்பகல் 4 மணி முதல் ஜூலை 22 வரை மெக்கானிக்கல் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும். ஜூலை 22 முதல் ஆக., 6 வரை எலக்ட்ரிக் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும். மாணவர்கள் தங்களது தரவரிசை (கட்-ஆப் மார்க்) பட்டியலை 'தீதீதீ.ச்ஞிஞிஞுt.டிண'' என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மாணவர்களின் போக்குவரத்து வசதிக்கென, புது, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கல்லூரி வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை