தித்வா புயலை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயாராக இருங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை: தித்வா புயல் கனமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை: தித்வா புயல் காரணமாக, மழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது என்றாலும், ஒருவேளை இயற்கை வழக்கத்திற்கு மாறாகப் பெருமழைப் பொழிவை ஏற்படுத்தினாலும் சரியான முன்னெச்சரிக்கையுடன் பதற்றமில்லாமல் மழைக் காலத்தை எதிர்கொள்வோம். பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் திமுகவினர் துணையாக நிற்க வேண்டும் என திமுகவினரை கேட்டுக் கொள்கிறேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=exx16e2t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளிலேயே முழுமையாக இருந்து மக்களுக்கு உதவிட வேண்டும். மழைக்காலத்தில் திமுகவினர், தன்னார்வலர்களுடன் இணைந்து பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்துக் கொள்வது அவசியம். குடிநீர், பால் ஆகிய இரண்டும் மிக அவசியமான தேவையாக இருக்கும். எனவே தங்கள் பகுதிகளில் அவை தடையின்றிக் கிடைக்கின்றனவா என்பதைக் கண்காணித்து, தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரவும், ஆங்காங்கே நடைபெறும் மீட்பு பணிகளிலும் உதவிடவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மழைக்காலத்தை எதிர்கொள்ளவும், பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையிலும் கட்சியினர் களத்தில் முழுமூச்சுடன் துணையாக நிற்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.ஸ்டாலின் பேட்டி
சென்னையில் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில் நவ. 29,30 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களிடம் ஆய்வு மேற்கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அறிவுறுத்தியுள்ளேன். தித்வா புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவசியம் இல்லை
டெல்டா மாவட்ட பகுதி மக்களை தமிழக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக இபிஎஸ் கூறியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''அவர் வஞ்சிக்காமல் இருந்தால் போதும் அதுதான் முக்கியம். அவர் அப்படி சொல்லிக் கொண்டுதான் இருப்பார். அது போல் எதுவும் கிடையாது. அவர் எப்போதும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை” என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.