வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Nothing will happen. From some students they would demand money and some others would compelled to accompany them to conferences/seminars held in far away places. This two would never change.
கோவை: கோவை பாரதியார் பல்கலையின், 39வது பட்டமளிப்பு விழாவின் போது, பி.எச்டி., பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர், கவர்னர் ரவியிடம் மனு ஒன்றை அளித்தார். மனுவில், பாரதியார் பல்கலையில் பி.எச்டி., மாணவர்கள், நெறியாளர்களின் வீட்டு வேலைகளை செய்ய வற்புறுத்தப்படுவதாகவும், மாணவர்கள் தங்கும் விடுதி மோசமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.விழா முடிந்ததும், மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், மாணவர் விடுதியில் ஆய்வு செய்தார். உணவின் தரத்தை சோதித்தார்; மாணவர்களுக்கு தேவையான உரிய வசதிகளை செய்து தர, பல்கலை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.இந்நிலையில், மாணவரின் புகார் குறித்து, பல்கலை நிர்வாகம் தனது விசாரணையை துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, துறையில் நடந்தது குறித்து விளக்கம் அளிக்க, மாணவரின் வழிகாட்டியான, ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் காசிராஜனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை மற்றும் தேர்வுத் துறைகளுக்கும், விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.பல்கலை பதிவாளர் ரூபா கூறுகையில், ''மாணவர், கவர்னரிடம் அளித்த மனு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் நடந்தது என்ன, மாணவரின் புகார் உண்மை தானா என விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
Nothing will happen. From some students they would demand money and some others would compelled to accompany them to conferences/seminars held in far away places. This two would never change.