உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநகராட்சி கழிவறைக்கு அண்ணாதுரை, கக்கன் பெயர்: தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை கண்டனம்

மாநகராட்சி கழிவறைக்கு அண்ணாதுரை, கக்கன் பெயர்: தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை மாநகராட்சி கழிவறைக்கு வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, கக்கன் ஆகியோர் பெயர்களை அழிக்க வேண்டும், அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். கோவை மாநகராட்சியில் கழிவறை ஒன்றிற்கு முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, கக்கன் ஆகியோர் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய விரிவான செய்தியை தினமலர் நாளிதழ் வீடியோ வடிவில் வெளியிட்டது. இந்த செய்தியை அறிந்த பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hqyayilj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுகுறித்து தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அவர் தமது அறிக்கையில் கூறி உள்ளதாவது; கோவை மாநகராட்சியில், முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை மற்றும் காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய நேர்மையான தலைவர் கக்கன் ஆகியோர் பெயரை, கழிவறைக்கு வைத்திருக்கிறார்கள். எளிமையான இரண்டு தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த தரம்தாழ்ந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பஸ் நிலையங்கள், அரசு கட்டடங்களுக்கெல்லாம் தனது தந்தை பெயரை வைத்து அழகு பார்க்கும் முதல்வர் ஸ்டாலின், அவரை விட மகத்தான தலைவர்கள் பெயரை, கழிப்பறைக்கு வைப்பது, அவர்களை அவமானப்படுத்தும் நோக்கமே அன்றி வேறென்ன?உடனடியாக, கழிவறையில் இருந்து தலைவர்கள் பெயரை அழிக்க வேண்டும் என்றும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Mecca Shivan
ஏப் 22, 2025 07:01

தமிழக காங்கிரஸ் இறந்துவிட்டது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது ..அண்ணாதுரையை அசிங்க படுத்துவது திமுகவின் பிறப்புரிமை .. ஆனால் கக்கன் அவர்களின் திருப்பெயரை வைக்க எவ்வளவோ நலத்திட்டங்கள் இருந்தும் திராவிட மாடல் அரசு இப்படி செய்கிறது என்றால் அதற்க்கு உள்நோக்கம் இருக்கவேண்டும்.. செல்வம் பெருந்தொகையும் இதை கண்டும் காணாமல் இருக்க ஏதாவது கொடுத்திருப்பார்கள்


Kasimani Baskaran
ஏப் 22, 2025 04:09

மன சுத்தம் இல்லை என்றாலும் கை சுத்தமான சி என் அண்ணாதுரை போன்றோரை இந்த அளவுக்கு அவமானப்படுத்தக்கூடாது.. ஒரு வேளை ஆத்தா தீம்க்காவின் வரும் "அண்ணா" மீது வந்த வெறுப்போ என்று நினைக்கத்தோன்றுகிறது.


மாரன்
ஏப் 22, 2025 02:17

கட்டுமரம் பெயர் வைக்கலாம்


முத்து கிருஷ்ணன்
ஏப் 22, 2025 00:00

மிஸ்டர் முன்னாள் தலீவரு, உன் பேரு வைக்கல இல்ல? சும்மா போவியா, கூவிகிட்டு.


Kjp
ஏப் 21, 2025 22:33

அவரை குறை சொல்லத்தான் தெரிகிறது.உங்களுக்கு அண்ணா கக்கன் பெயர்களை கழிப்பறைக்கு வைப்பது மிக கேவலமாக இல்லையா.அண்ணாமலை சொன்ன து தவறு என்று தெரிந்தும் பதில் சொல்ல முடியாமல் உருட்டுவதே வேலை ஆகி விட்டது.


Ramesh Sargam
ஏப் 21, 2025 21:53

ரயில் பெட்டிகளில் உள்ள கழிவறைகளுக்கு கருணாநிதி பெயர் பொருத்தமாக இருக்கும்.


..
ஏப் 21, 2025 22:25

மிக நன்று


தமிழ்வேள்
ஏப் 21, 2025 21:48

கக்கன் பெயருக்கு பதிலாக கட்டுமரம் பெயரை வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும்


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 22:26

வாங்கி சாப்பிடும் பழக்கம் தான் வெளியே காத்து தான் வரும்


thehindu
ஏப் 21, 2025 21:47

எங்காவது சந்து பொந்துகளிலெல்லாம் தேடி அலையா வேண்டிய கட்டாயம் .


Oviya Vijay
ஏப் 21, 2025 21:33

இன்னாள் தலைவரா இருக்கப்பவே உங்கள திமுகல எவனும் மதிக்கலையாம்... இப்போ சொந்த கட்சியே உங்கள தூக்கிட்டு முன்னாள் தலைவர் வேற ஆக்கிருச்சு... இனிமே கூட உங்கள மதிப்பாங்கன்னு நினைக்குறீங்களா???


..
ஏப் 21, 2025 22:24

அப்போ கழிவறைக்கு சிறந்ததலைவர்கள் பெயர் வைத்தது சரி என வாதாடுவீர்கள் போல கக்கன் ஊழல் கறைபடியாதவர்


Raj S
ஏப் 21, 2025 22:32

முதலமைச்சரா இருக்கும்போதே யாரும் மதிக்கிறதில்லன்னு பொலம்பிகிட்டு இருக்கார்... அத போய் என்னனு விசாரிங்க...


vivek
ஏப் 21, 2025 23:10

அட ஒரு கழிவறைக்கு இந்த ஆர்டிஸ்ட் பேரை வைங்கப்பா ...ரொம்ப வருத்த படுகிறார்


Shankar
ஏப் 21, 2025 21:26

திமுக கட்சி அழிவு பாதையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியைப்போல இதுவும் வெகுவிரைவில் மூழ்கப்போகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை