உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்

தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடியுடன் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டார். 'தி.மு.க., அரசை கண்டித்து இன்று (மார்ச் 22) கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடக்கும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி, தி.மு.க., அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது.https://www.youtube.com/embed/7j318ljoTPkசென்னை பனையூரில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடியுடன் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டார். சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:தமிழக மக்களின் நலனை காக்கவே கருப்புக்கொடி போராட்டம். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசு உறுதி அளித்த பின்பும் நம்ப மறுப்பது ஏன்? கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் தேவையற்றது. மேகதாது அணை கட்டுவதாக கூறும் சிவக்குமாருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Bala
மார் 22, 2025 14:46

ARREST TASMAC CULPRITS. GIVE JUSTICE TO PEOPLE OF TAMILNADU


Bala
மார் 22, 2025 14:26

திராவிட மாடல் குள்ளநரிகளுக்கு கொள்ளையர்களுக்கு எதிராக ஒற்றை ஆளாக போராடும் சிங்கத்தமிழன் திரு அண்ணாமலை அவர்கள் வாழ்க வளர்க. 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் சரித்திரம் படைக்கும். டாஸ்மாக் சாராய ஊழலில் திமுக மண்ணை கவ்வும். திமுக தலைவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக சிறைக்கு செல்வார்கள். தமிழக மக்களின் அமோக ஆதரவை திரு அண்ணாமலை அவர்கள் பெறுவார்கள்


MP.K
மார் 22, 2025 13:17

சவுக்கடி இல்லையா ????


Balaa
மார் 22, 2025 12:23

இன்றைக்கும் சென்னையில் கருப்பு துப்பட்டாவிற்கு தடையா? நம்ம போலீசின் கடமை உணர்வுக்கு அளவே கிடையாதே...


Ray
மார் 22, 2025 12:48

வரலாற்றிலேயே கண்டிராத விதமாக அவரவர் வீட்டுமுன்னால் கறுப்புக் கொடியேந்தி என்று இவரகளது போராட்டம் வீ ர ரியமிழந்து சுருங்கி விட்டதே? என்ன காரணமாம்? கல்யாண மண்டபங்களில் தொண்டர்களேயில்லாமல் பங்கப்பட்டு ஒண்டியா உட்கார்ந்திருந்த இருந்த பலவீனமா / பயமா?


Bala
மார் 22, 2025 14:22

திராவிட பித்தலாட்டக்காரர்களுக்கு எதிராக போராடும் வீரம் மிக்க ஒரே சிங்க தமிழன் தலைவன் திரு அண்ணாமலை அவர்கள் மட்டுமே. மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடைநடுங்கிகள்


Balaa
மார் 22, 2025 12:21

இன்றைக்கு ராமசாமி கோஷ்டி எவனும் வெளியில் வர மாட்டான். கறுப்பு சட்டை போட முடியாது.


Karunakaran
மார் 22, 2025 11:31

ஐயா தாங்கள் தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்க்காக போராட நினைத்தால் , நிறைய விஷயங்கள் உள்ளது. எடுத்துக்காட்டாக , நதிகளை இணைக்க போராடுங்கள் . நீர்நிலைகள் , ஆறு , ஓடை , ஏறி மற்றும் குளங்களை மீட்டெடுத்து தூர்வாரி தமிழ்நாட்டின் நீராதாரத்தை பெருக்க முயற்சி செய்யுங்கள் போராடுங்கள். தமிழ் நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரியில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு போக மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்று போராடுங்கள். தமிழ் நாட்டு மக்கள் உங்களை நம்புவார்கள். உங்களுக்கு ஓட்டு போடுவார்கள். இதை விடுத்து , வீடுதோறும் விளக்கு ஏந்துங்கள் , கருப்பு கொடி பிடியுங்கள் என்றால் மக்கள் தாங்களை நம்பமாட்டார்கள் . நன்றி தினமலர் .


xyzabc
மார் 22, 2025 11:19

நியாயமான போராட்டம். ஆனால் மக்களோ விலைக்கு வாங்கப்பட்டு விட்டனர்.


Raja k
மார் 22, 2025 11:13

அண்ணாமலையான் மேலிட தலமைக்கு பயம் வந்துவிட்டதா


பாமரன்
மார் 22, 2025 11:10

ஆஹா...‌ஒரு வழியாக போராட்டம் எதுக்குன்னு கண்டுபுடிச்சிட்டாய்ங்க... எங்கியோ இருந்து இன்னிக்கு சென்னையில் இருக்கும் சிவகுமாரை கண்டித்து அவிங்கவிங்க ஊட்டுல இருந்து போராட்டமாம்... சரி சரி... டிஃபன் சாப்ட்டுட்டு அடுத்ததா ஜாக்கி இன்னர்வேர் போடுற போராட்டம் அறிவிங்க ம்மே ம்மே... காரணம் படை சொறி சிரங்குன்னு எதாவது கிடைக்காமலா போயிடும்... நம்ம டூட்டி காமெடி பண்றது..‌ அப்ரசண்டிகளை குஷியாக வச்சிக்கிறது தானே...


Rengaraj
மார் 22, 2025 11:04

ஒரு ஆளும் கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் அதை மக்களுக்கு கொண்டுசெல்லவேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகள் அனைத்துக்கும் உள்ளது. இந்த விஷயத்தில் பாஜக தனது தொண்டர்கள் மூலம் அதை மக்களிடம் நேரடியாக பேச வேண்டும். நிறைவேற்றாத வாக்குறுதி பற்றி பேனர் அடித்து அதை தொண்டர்கள் ஒவ்வொருவரும் அதை பிடித்துக்கொண்டு நகரில் மக்கள் மத்தியில் தெரியுமாறு செய்யலாம். ஒவ்வொரு நாளும் நிறைவேறாத வாக்குறுதி ஒன்றை பற்றி பேசலாம். வட்டாட்சியர் அலுவலகம், மண்டலா அலுவலகம் , மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், இவைதான் சாதாரண மக்கள் வந்துசெல்லும் இடங்கள். இங்கே பதாகைகளை வைத்துக்கொண்டு இருக்கவேண்டும். திட்டத்துக்கு நிதி ஒதுக்கி அதை செயல்படுத்தவில்லை என்றால் அதை அந்த தொகுதிக்கு அல்லது அந்த ஊருக்கு எவ்வளவு , அதில் எவ்வளவு பாக்கி , என்று சில புள்ளிவிவரங்களை பேனர் மூலம் மக்களுக்கு தெரிய வைக்கலாம். கல்வி விஷயத்தில் எவ்வளவுக்கெவ்வளவு புள்ளிவிவரங்களை தருகின்றனரோ அது சாதாரண மக்களை நன்றாகவே சென்றடையும். அதேபோன்று மகளிர் சம்பந்தப்பட்ட திட்டங்களில் உள்ள சுணக்கம், வயோதிகர் சம்பந்தப்பட்ட திட்டங்களில் இருக்கும் குறைபாடு, சிறு ஊர்களில் இருக்கும் குறைபாடுகளை களைவதற்கு அந்த தொகுதிகள், வார்டுகள், சார்ந்த பிரச்சினைகளை கையிலெடுக்கவேண்டும். காவல்துறை அனுமதி தந்துதான் வீதியில் இறங்கி போராடுவோம் என்றால் பாஜக மக்களை சென்று சேரவே முடியாது. மைக்ரோ லெவல் மேனேஜ்மென்ட் பற்றி அண்ணாமலை தனது தொண்டர்களுக்கு தொடர்ந்து பாடம் எடுக்கவேண்டும். அண்ணாமலை மட்டுமே வெற்றியை தேடி தர முடியாது. இதை பாஜக ஆரம்பத்திலேயே உணர்ந்து மக்களுக்காக போராடவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை