உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொளத்துாரில் போலி வாக்காளர் பா.ஜ., புகார்

கொளத்துாரில் போலி வாக்காளர் பா.ஜ., புகார்

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்துாரில், போலி வாக்காளர்கள் குறித்து விசாரிக்குமாறு, தலைமை தேர்தல் கமிஷனருக்கு, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத் புகார் அனுப்பியுள்ளார். புகாரில், 'சென்னை கொளத்துார் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்.வாக்காளர் பட்டியலில், 19,476 பேரின் பதிவுகள் சந்தேகத்திற்குரியவை. அங்கு, 4,379 இரட்டை வாக்காளர் பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. 'சந்தேகத்திற்கு உரிய வாக்காளர்களை சரி பார்த்து, போலி பதிவுகளை உடனே நீக்க வேண்டும். ஓட்டுச்சாவடி அளவிலான சிறப்பு சரிபார்ப்பு பணிகளை தொடங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை