உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வுடன் கூட்டணி ஏன்; பா.ஜ., பொதுச்செயலாளர் விளக்கம்

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி ஏன்; பா.ஜ., பொதுச்செயலாளர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : ''பா.ஜ., - அ.தி.மு.க.,வும் ஹிந்து உணர்வுமிக்க கொள்கை ரீதியாக ஒன்றிணைந்தவை'' என பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறினார்.மதுரையில் ஜூன் 22ல் ஹிந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் முருகபக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. இதில் பங்கேற்ற கருப்பு முருகானந்தம் நமது நிருபரிடம் கூறியதாவது: மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைவர். பழமையான திருப்பரங்குன்றம் மலையில் சிலர் அசைவ உணவை வைத்து களங்கப்படுத்தி விட்டனர். இம்மாதிரியான தீய சக்திகளுக்கு எதிரான உரிமை மீட்கும் மாநாடாக இது விளங்கும். ஓட்டு வங்கியை மனதில் வைத்து இது நடக்கவில்லை. பா.ஜ., - அ.தி.மு.க.,வும் ஹிந்து உணர்வுமிக்க கொள்கை ரீதியாக கூட்டணியாக ஒன்றிணைந்தவை.சட்டசபை தேர்தலில் தி.மு.க., அரசை தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்த்தும். நடிகர் விஜய் போன்றவர்கள் பொதுஇடத்தில் பேசினால் கூட்டம் கூடுமே தவிர, ஓட்டுகளாக மாறாது. காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக விரைவில் மீண்டுமொரு 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நிகழ்த்தப்படும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajasekaran
மே 03, 2025 12:59

இந்து உணர்வு என்று சொல்வது எல்லாம் ஓட்டு தானே. வேற என்ன சாதனை சொல்லப்போறீங்க.


அப்பாவி
ஏப் 30, 2025 06:46

ஐயா சுத்த சைவமோ?


Padmasridharan
ஏப் 30, 2025 05:53

ஹிந்துக்கள் இறந்தால் எரிக்கிறாங்க, வெந்தும் வேகாததுமாய். கிறிஸ்துவ, முஸ்லீம் மதங்களில் புதைக்கிறாங்க. இதனால் அந்த மதங்களில் இறந்தும் மதிப்பிருக்கிறது ஆனால் ஹிந்துக்களில் இருந்தும் இறந்த மாதிரி நடத்துகிறார்களே. இந்தக் கொள்கைக்கு எந்த கட்சியுடன் சேருவார்கள். கொள்கை நல்லதா இருந்தா, தனியா நின்னாலும் விஜயம்தான், சிலருக்கு கூட்டணியே ஒரு கொள்கைதான். இரட்டை இலை MGR சின்னம் காணாமல் போகிறது. அவரு அந்த காலத்துல மக்களுக்கு என்ன தேவையோ அத செஞ்சிட்டாரு, இப்ப இருக்கிறவங்க எதெதையோ செஞ்சிட்டு, செஞ்சதெல்லாம் மக்களுக்காகனு சொல்லிக்கிட்டு தங்களையும், கடவுளையும் ஏமாத்திகிட்டு இருக்காங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை