மேலும் செய்திகள்
ஆபரண தங்கம் விலை; சவரனுக்கு ரூ.560 உயர்வு
37 minutes ago
ஆராய்ச்சியாளர்களுக்கு மகளிர் ஆணையம் உதவித்தொகை
56 minutes ago
வாக்காளர் பெயர் சேர்ப்பு இன்று, நாளை சிறப்பு முகாம்
1 hour(s) ago
சென்னை: ‛‛தமிழகத்தில் மதுவை ஒழிக்கும் சக்தி பா.ஜ.,வுக்கு தான் உள்ளது'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில், யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை பேசியதாவது: ஒருபுறம் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதிய மாணவர்கள் ரிசல்ட் வர வில்லை என போராடி கொண்டு இருக்கின்றனர். மறுபுறம் செவிலியர்கள் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனை தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றியது தான். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=anq0s3da&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது. தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியது தான் திமுக ஆட்சியின் இரண்டாவது சாதனை. கோயில்கள், மசூதிகள் அருகில் என தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் சாராய கடைகளை திறந்துள்ளனர்.தமிழகத்தில் மதுவை ஒழிக்கும் சக்தி பா.ஜ.,வுக்கு தான் உள்ளது. பா.ஜ.,வில் உள்ள யாரும் மதுபான ஆலைகளை நடத்த வில்லை. தமிழகத்தில் கள்ளு கடையை திறப்பதற்கான நேரம் வந்துவிட்டது. டாஸ்மாக் கடைகளை மூடும் நேரம் வந்துவிட்டது. அரசியல் மாற்றம் மிக மிக முக்கியம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
37 minutes ago
56 minutes ago
1 hour(s) ago