உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்போ, பல லட்சம் இளைஞர்கள் நிலைமை? டி.என்.பி.எஸ்.சி., மீது அண்ணாமலை பாய்ச்சல்

அப்போ, பல லட்சம் இளைஞர்கள் நிலைமை? டி.என்.பி.எஸ்.சி., மீது அண்ணாமலை பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. நடத்திய அரசு உதவி வக்கீல் பணிக்கான முதல் நிலை தேர்வில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால், மறுதேர்வு நடத்த வேண்டும் என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு உதவி வக்கீல் பணியில், காலியாக உள்ள 51 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும், முதல் நிலை தேர்வு இன்று பிற்பகல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வுக்கு, 4,000க்கும் மேல் எண்ணிக்கையில் வக்கீல்கள் விண்ணப்பித்திருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rthob735&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், தேர்வுகள் நடந்த பல மையங்களில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வக்கீல்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், முறைப்படி விண்ணப்பித்த பல வக்கீல்களின் பெயர்கள், தேர்வு மையங்களில் விடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது. தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், 4,000 வக்கீல்களுக்கான தேர்வு ஏற்பாடுகளையே முறையாக மேற்கொள்ளவில்லை என்றால், தேர்வாணையம் நடத்தும் இதர தேர்வுகளை நம்பி அரசுப் பணிக்கான தேர்வுகள் எழுதக் காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்கள் நிலை என்ன?அரசுப் பணிக்கான தேர்வுகளை இத்தனை அலட்சியப் போக்கில் கையாளும் தி.மு.க., அரசினை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக, இன்று நடைபெற்ற தேர்வைக் கைவிட்டு, மீண்டும் வெகுவிரைவில் முறையான மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sampath Kumar
டிச 15, 2024 08:48

பல லச்சம் மாணவர்கள் நிலைமை ?உண்ணும் பிரச்னை இல்லை


ghee
டிச 15, 2024 15:10

டாஸ்மாக் and சைட் டிஷ் சொல்றாரு நம்ம சம்பத்து


நிக்கோல்தாம்சன்
டிச 15, 2024 05:37

விடிந்து விடும் ன்று கணக்கு காட்டிய அரசிடம் இன்னமும் விடியலை பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள் , நீ குருடி என்றுதான் காட்டிவிட்டு செல்வார்கள் , நேபோட்டிசம் எதற்கு வேண்டாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தமிழ்நாடு


Oru Indiyan
டிச 15, 2024 02:46

நீட் தேர்வு பற்றி வாய் கிழிய பேசிய வாய்களில் என்ன இருக்கிறது இப்போ.


சம்பா
டிச 15, 2024 00:05

என்ன பாஞ்சாலும் எவனும் பின்வரப்போவது இல்ல ராஜா


வைகுண்டேஸ்வரன்
டிச 14, 2024 22:58

இதுவே, "மறு தேர்வு " கிடையாது என்று அரசு சொல்லியிருந்தால்..., "இல்லை, மறு தேர்வு நடத்த வேண்டும்" என்று பேசுவார்கள்.


சாண்டில்யன்
டிச 14, 2024 21:31

வினாத்தாள் லீக் இல்லையே என்று வருத்தப்படுகிறார் போல


Pandi Muni
டிச 14, 2024 20:39

அப்புடியே இவனுங்க தேர்வு நடத்திட்டாலும்


வைகுண்டேஸ்வரன்
டிச 14, 2024 22:56

அப்படியே நடத்திட்டாலும் னா? இதென்ன கருத்து? நீங்க வக்கீலும் இல்லை. டி என் பி எஸ் சி தேர்வு எழுதியிருக்கவும் வாய்ப்பில்லை. 64 வருடங்களாக தேர்வு கள் நடத்தவில்லையா? என்னத்தையாவது எழுதறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை