உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி பா.ஜ., இன்று ஆர்ப்பாட்டம்

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி பா.ஜ., இன்று ஆர்ப்பாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ வதந்திகளை கிளப்பும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த ஏப்., 22ம் தேதி சுற்றுலா சென்ற மக்களை, மதத்தின் பெயரால் படுகொலை செய்த கொடூரம், உலக நாடுகளையே உலுக்கியுள்ளது. இந்தியாவிற்குள் நடக்கும் பல அசம்பாவிதங்களுக்கு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்து சட்டவிரோத குடியேறிகளே காரணம் எனவும், ஒரு அசாதாரண சூழ்நிலையில், நம் நாட்டை சேதப்படுத்தும் நோக்கத்துடன் தான், அவர்கள் இங்கு குடியேறியுள்ளனர் என்ற சந்தேகமும் தலைதுாக்கி உள்ளது.தி.மு.க., அரசை விமர்சனம் செய்தால் கைது, பொய் வழக்கு; பா.ஜ.,வினர் உட்பட எதிர்க்கட்சியினர் மீது காவல் துறையை ஏவி அச்சுறுத்தல் என, சர்வாதிகார போக்கை கையாளும் தி.மு.க., ஆட்சியில், தேச இறையாண்மைக்கு விரோதமாகவும், இந்திய ராணுவத்தை அவமதிக்கும் விதமாகவும் பதிவிடுபவர்கள் சுதந்திரமாக உலவுகின்றனர். தி.மு.க., அரசே அவர்களை சீராட்டி வளர்ப்பது போல் உள்ளது.பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதில், தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும். ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும் ஆதாரமற்ற விஷ வதந்திகளை கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பஹல்காம் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்தும், இன்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தை காக்க, தேச பக்தர்கள் அனைவரும் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

arunachalam
மே 05, 2025 10:24

அண்ணாமலை சென்ற பின், ஆதிமூகாவுக்கு அடிமையா இப்படி ஒரு கட்சி இருக்கா? நிறைய பாஜாகா தலைவர்கள் அக் கட்சியை அழிக்க நினைத்தார்கள். இப்ப உள்ளிருந்து 11% வாக்கை 3% வாக்காக மாற்றுவார்கள். தேர்தல் வரை பொறுத்திருங்கள். நேர்மை ன்பது இப்பொழுது இருக்கும் தலைவர்களிடம் இல்லை. தீமூகாவிடம், அதிமுகாவிடம் காசு வாங்கிண்டு பாஜாகாவை அழிப்பார்கள்.


GMM
மே 05, 2025 09:47

ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும் ஆதாரமற்ற விஷ வதந்திகளை கிளப்பும் நபர்கள் மீது தமிழக மாநில நிர்வாகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஜேபியுடன் அண்ணா திமுக போன்ற கூட்டணி கட்சிகள் மற்றும் நடுநிலை தேச பக்தி மக்கள் அவசியம் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். வீட்டில் பாதுகாப்பாக இருக்க ராணுவ வீரர்கள் தியாகம் காரணம்.


Padmasridharan
மே 05, 2025 08:08

தமிழகம், சென்னையை முதலில் ECR & OMR பகுதிகளில் இங்கு தமிழில் படித்தவர்களினால் வேலை செய்ய இயலுமா. மற்ற மாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்கள்தான் அதிகம். எல்லா சிறு _சிறு குற்றங்களுக்கும் அரசு கட்சியை குறை கூறமுடியாது. ஒவ்வொரு இடத்திலும் காவலர்களின் பணி என்ன என்பதை மறந்து பணத்திற்காக பஞ்சாயாயத்து பண்ணி குற்றவாளிகளை வெளியில் விட்டு குற்றங்களை அதிகரித்து உள்ளனர். உண்மையான விஷபாத்திரத்தை அழிப்பதை விட்டுவிட்டு வெறும் வாய்ச்சண்டை மொழி மூலமாக போட்டுக்கொண்டிருக்கிறார்கள் தேர்தலில் ஜெயிக்க. மக்களுக்கு உண்மையாக வேலை பார்ப்பவர்கள் மிகவே இல்லை


நிக்கோல்தாம்சன்
மே 05, 2025 07:02

மர்ம மத தீவிரவாதிகள் தானே இதை செய்தார்கள் என்று தமிழக மீடியா எழுதக்கூடும், நீங்க என்னடான்னா , உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வதில் தீவிரவாதிகளுக்கு அவ்ளோ குஷி , ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் இல்லையே


pmsamy
மே 05, 2025 06:53

உன் மேல நீயே வாழ்க்கை தொடர போறியா ஐயோ ஐயோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை