உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உறவுக்கு அவசியமில்லை; ஊர்ந்து சென்று பதவி பெறவும் இல்லை; இ.பி.எஸ்.,க்கு ஸ்டாலின் பதில்

உறவுக்கு அவசியமில்லை; ஊர்ந்து சென்று பதவி பெறவும் இல்லை; இ.பி.எஸ்.,க்கு ஸ்டாலின் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க.,- பா.ஜ., இடையிலான உறவு வெட்ட வெளிச்சமாகி உள்ளது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியிருந்தார். இதற்கு, 'பா.ஜ.,வுடன் ரகசிய உறவு வைத்து கொள்ள அவசியம் இல்லை' என முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.சென்னை திருவொற்றியூர் சட்டசபை உறுப்பினர் கே.பி.சங்கரின் இல்லத்திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கருணாநிதி நூற்றாண்டு விழா போல, இந்தியாவில் வேறு எந்த விழாவும் நடக்கவில்லை. தி.மு.க.,வினரை விட ராஜ்நாத் சிங் கருணாநிதியை புகழ்ந்து பேசியுள்ளார். உள்ளத்தில் இருந்து உண்மையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lu396z2r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தூக்கம் வரவில்லை

கருணாநிதி பற்றி அப்படி புகழ்ந்து பேச வேண்டுமென ராஜ்நாத் சிங்கிற்கு அவசியமே இல்லை. ராஜ்நாத் சிங் கருணாநிதியை பற்றி பேசியதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அனைத்து தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடும் போது, ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். சோகம் இருந்தால் இரவு நேரத்தில் எனக்கு தூக்கம் வராது. நேற்று கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றதால் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை.

இரங்கல் கூட்டம்

நிகழ்ச்சியை நடத்தியது தி.மு.க., அல்ல; மத்திய அரசு என்பதை கூட இ.பி.எஸ்., புரிந்து கொள்ளவில்லை. மத்திய அரசு நிகழ்ச்சி என்பதால் நாணயம் வெளியிட்டு விழாவில் இ.பி.எஸ்.,ஐ அழைக்கவில்லை. எம்.ஜி.ஆர்., நாணய வெளியிட்டின் போது இ.பி.எஸ்.,ஐ மத்திய அரசு மதிக்கவில்லை. ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள் அவருக்காக இரங்கல் கூட்டம் நடத்தியுள்ளார்களா?

ரகசிய உறவு

பா.ஜ.,வுடன் ரகசிய உறவு வைத்து கொள்ள அவசியம் இல்லை. இ.பி.எஸ்., மாதிரி ஊர்ந்து சென்று பதவி வாங்கும் அவசியம் தி.மு.க.,வுக்கு இல்லை. ஆதரித்தாலும், எதிர்த்தாலும் தி.மு.க., எப்போது அதன் கொள்கையோடு இருக்கும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Sathish Kumar
ஆக 20, 2024 13:26

அவர்களின் முதன்மையான கொள்கை ஊழல் ஊழல் சொல்ல யாரை வேணாமாம் எதிர்ப்பார்கள் யாரை வேணாலும் ஆதரிப்பார்கள் இதுதான் கட்டு மரமும் கோபால மரத்தின் கொள்கை


ஆதிவேல்
ஆக 19, 2024 21:37

ஓட்டுக்கு அந்தக்காலத்தில் பது ரூவா குடுத்து வென்றோம். இப்போது 2000 ரூவா குடுத்து ஜெயிக்கிறோம். வந்து கொள்ளையடிச்சு இன்னும் ஏழு தேர்தலுக்கு பணம் சேர்த்துப்போம். யாரோட தயவும் தேவையில்லை.


Matt P
ஆக 19, 2024 21:10

unka அப்பா முதல்வராயிருந்தார் உனக்கு வூர்ந்து செல்லும் நிலைமை ஏற்படவில்லை பதவியை பெறுவதற்கு. உங்கள் தந்தை முதல்வர் பதவியை எப்படி பெற்றார் என்று வூருக்கவே தெரியும். அண்ணாதுரை மறைவு -மறைந்தவுடன் கொஞ்சம் கூட பொறுக்க முடியாமல் வேறு யாருக்காவது போய் விட கூடாதே என்று எம்ஜிஆரை சந்தித்து பெற்று பின்னாளில் ஏறி வந்த ஏணியையே எட்டி உதைத்து இட்டார். நம்பிக்கை துரோகத்துக்கு உதாரணமும் ஆகி விட்டார். வூர்ந்தது தவறு என்றால் துரோகமும் தவறு தான்.


metturaan
ஆக 19, 2024 20:39

அவமானங்களை துடைத்து துடைத்து காசாய் மாற்றிய இந்திய திருநாட்டின் மிக பெரிய பணக்கார சாம்ராஜ்ய கழலகம் சொல்வதை கேட்டு சிரிப்பு தான் வருகிறது.


RAMESH
ஆக 19, 2024 20:37

ஸ்டாலின் நமது முதல்வர்....அதிமுக மீது எத்தனை குற்றச்சாட்டு.....முதல்வர் ஆவதற்கு முன்பு... ஷாக் அடிக்குது.....சாராயம் விற்கும் எடப்பாடி அரசு....பால் விலை உயர்வு.... சொத்து வரி உயர்வு... ஊர்ந்து சென்று பதவி பிடித்த எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவோ மேல்...


kathiravan rajamanickam
ஆக 19, 2024 17:19

திரு ஸ்டாலின் அவர்களே உங்களது சமீபத்திய கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவிற்கு பிஜேபி ராஜ்நாத் சிங்க அழைத்து விழா நடத்தியது வரவேற்க்க தக்கது . அதே சமயம் தமிழ் நாட்டுக்கு தேவையான நிதி மற்றும் திட்டங்களை பெறுவதிலும் நீங்கள் எதிர் கத்தியோடு இணக்கமாக செயல்பட்டால் நல்லதாக இருக்கும்


Matt P
ஆக 19, 2024 21:17

அப்பா நாணயம் கிடைத்த மகிழ்சியியில் தமிழகத்துக்கு திட்டங்கள் வேண்டுமா என்பதெல்லாம் மறந்திருக்கும் . குடும்பமே ஆனந்த கண்ணீர் வடிச்சுக்கிட்டு இருப்பாங்க. அது உலர கொஞ்ச நாள் ஆகும் .


ஆரூர் ரங்
ஆக 19, 2024 17:03

கட்டூ வுக்கு கொள்கை மேல் துண்டு. பதவி வேட்டி. குடும்பம் தான்


TAMILAN
ஆக 19, 2024 16:26

தமிழகத்தில் பண்ணையார் ஆட்சி நடக்கின்றது கொத்தடிமைகளாக தி.மு.க மூத்த தலைவர்கள்.


Swaminathan L
ஆக 19, 2024 15:53

நேற்று விழாவை நடத்தியதும் மத்திய அரசு தானா? மத்திய அரசு தானே முன்வந்து கலைஞருக்கு நூறு ரூபாய் நாணயம் வெளியிடுகிறது என்று தமிழ் தொலைக்காட்சி வாத நிகழ்ச்சியில் ஒருவர் வாதிடுகிறார். ராஜ்நாத் சிங் புகழாரங்களின் கனம் தாங்காமல் திமுக திக்கு முக்காடியது. இப்போது முதல்வர் விழாவே மத்திய அரசு தான் நடத்தியது என்கிறார். அடுத்தது, பாஜகவே முன்மொழிந்து பாரதரத்னாவும் தரட்டும் மத்திய அரசு தானாகவே முன்வந்து.


manokaransubbia coimbatore
ஆக 19, 2024 15:45

அறிவாலய முதல் மாடில சிபிஐ சோதனை கீழ் தளத்தில் ஆளுக்கு 110 சீட் ஜெயித்த பிறகு முதல்வர் யார் என்று முடிவு செய்யலாம் என்று ஒப்பந்தம் போட்டது யார் என்று தெரியுமா


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை