மேலும் செய்திகள்
உள்ளாட்சி தேர்தல்: காங்., தனித்து போட்டி!
20-Sep-2024
சென்னை, : 'ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நிறைவேறும் என்றால், அதை தவிடுபொடியாக்கும் அரசியல் போராட்டத்தை தேசிய அளவில் நடத்துவோம்' என, 'இண்டி' கூட்டணி கட்சிகளின் லைவர்கள் பேசினர்.ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வின் வெறுப்பு அரசியலை எதிர்த்து, தமிழக காங்கிரஸ் சார்பில், 'இண்டி' கூட்டணி கட்சியினர் பங்கேற்ற கண்டன கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, வெறுப்பு அரசியலை பரப்புகின்றனர். ராகுல், 2029ல் தன் ஆட்டத்தை துவக்குவார். பா,ஜ., ஆட்சிக்கு முடிவு கட்டுவார்,'' என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ''ஒரே நாடு, ஒரே தேர்தல்திட்டம் நிறைவேறும் என்றால், அதை தவிடுபொடியாக்கும் அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டும்,'' என்றார்.ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசுகையில், ''ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை ஏற்க முடியாது. அமெரிக்காவை போல அதிபர் ஆட்சி கொண்டு வர வேண்டும் என, பிரதமர் மோடி மனக்கணக்கு போடுகிறார். அவரது திட்டத்தை தோற்கடிக்க, நாடு முழுதும் ஒற்றுமையுடன் போராட்டம் நடத்த வேண்டும்,'' என்றார்.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''அஹிம்சையை கடைப்பிடிக்கும் ராகுலை, தனிப்பட்ட முறையில் அவதுாறாக பேசுகின்றனர். இந்த முதல் கூட்டம், இனி இந்தியா முழுதும் தீப்பொறியாக பரவும்,'' என்றார்.தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேசியதாவது:பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., வெறுப்பு அரசியல் விதையை விதைக்கின்றன. அந்த விதைகளை வேரறுக்க வேண்டும்; அப்போது தான் நாட்டை காப்பற்ற முடியும். பா.ஜ., பொய்யை முன்வைத்து வெறுப்பு அரசியல் செய்கிறது; ராகுல் அன்பின் அரசியல் நடத்துகிறார்.உ.பி., குஜராத் மாநிலங்களில் இருந்து தான், வெளிநாடுகளுக்கு மாட்டுக்கறி அதிகம் அனுப்பி வைக்கப்படுகிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் நடத்துகிற பள்ளி பாடப்புத்தங்களில், 'காந்தி விபத்தில் இறந்தார்' என, கற்பிக்கப்படுகிறது. ராகுல், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட இண்டி கூட்டணி தலைவர்கள், பா.ஜ.,வினரின் உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
20-Sep-2024