உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.வின் கணக்கு தப்பாகும்: காங்.- எம்.பி. கார்த்தி கருத்து

பா.ஜ.வின் கணக்கு தப்பாகும்: காங்.- எம்.பி. கார்த்தி கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: ''தமிழகத்தையும், தமிழக அரசியலையும் புரிந்து கொள்ளாதவர்கள், அயோத்தி ராமர் கோவிலால் தமிழகத்தில் பலன் கிடைக்கும் என அரசியல் கணக்கு போடுகின்றனர்,'' என, சிவகங்கையில் காங். எம்.பி. கார்த்தி குற்றம்சாட்டினார்.அவர் கூறியதாவது: அயோத்தி ராமர் கோவிலில் கூடிய கூட்டத்தை விட, தைப்பூசத்திற்கு பழனியில் அதிக கூட்டம் கூடும். இது, வட மாநிலத்தவர்களுக்கு தெரியாது. தமிழகத்தையும், தமிழக அரசியலையும் புரிந்து கொள்ளாதவர்கள், அயோத்தி ராமர் கோவிலால் தமிழகத்தில் பலன் கிடைக்கும் என அரசியல் கணக்கு போடுகின்றனர்.வட இந்தியர்களுக்கு தேவையானவற்றை பா.ஜ., செய்கிறது. ஆதலால் வட இந்தியாவில் பா.ஜ.விற்கு ஆதரவு உள்ளது. தமிழகத்தை விட சிறப்பான கோவில்கள் வடநாட்டில் இல்லை. உலகத்திலேயே அதிக கோவில் உள்ளது தமிழகத்தில் தான். தமிழக கோவில்களை பிரபலப்படுத்தி அதன் வாயிலாக கோவில் சுற்றுலா வளர்ச்சி அடைவதை வரவேற்கிறேன்.தி.மு.க., மிகப்பெரிய அரசியல் கட்சி என்பதை அக்கட்சியின் இளைஞர் அணி மாநாடு உறுதிப்படுத்தியுள்ளது. இதேபோல காங். கட்சி வருங்காலத்தில் தனது பலத்தை காட்ட வேண்டும். விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரி பல்வீர் சிங்கின் பணியிடை நீக்கத்தை, தமிழக அரசு ரத்து செய்தது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ