உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமியை வரவேற்க ரத்த கையெழுத்து

பழனிசாமியை வரவேற்க ரத்த கையெழுத்து

மதுரை: முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வரும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை வரவேற்க, 'ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது' என ரத்தத்தில் கையெழுத்திட்டார், முன்னாள் அமைச்சரும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான உதயகுமார். பழனிசாமி வருகை தொடர்பாக, ஜெ., பேரவை சார்பில் மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உதயகுமார் பேசியதாவது: முத்துராமலிங்க தேவருக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இதன் வாயிலாக, தேவர் புகழுக்கு புகழ் சேர்த்து உள்ளார் பழனிசாமி. எனவே, பழனிசாமிக்கு நன்றி செலுத்தும் வகையில், 'ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது' என்ற தலைப்பில் ரத்தத்தில் கையெழுத்திட்டு அவரை வரவேற்போம். இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து, உதயகுமார் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்டோர், ரத்தத்தில் கையெழுத்திட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !