உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போடி நகராட்சி தி.மு.க., தலைவரின் கணவர் ரூ.70 கோடிக்கு வரி ஏய்ப்பு?

போடி நகராட்சி தி.மு.க., தலைவரின் கணவர் ரூ.70 கோடிக்கு வரி ஏய்ப்பு?

போடி: போடி நகராட்சி தி.மு.க., தலைவரின் கணவரிடம், ஏலக்காய் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, அதிகாரிகள் ஏழு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். தேனி மாவட்டம், போ டி நகராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த ராஜராஜேஸ்வரி உள்ளார். இவரது கணவர் சங்கர். தி.மு.க., மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி கவுன்சிலராகவு ம் உள்ளார். சங்கர், தன் மகன் லோகேஷ், நண்பருடன் இணைந்து ஏலக்காய் வியாபாரம் செய்கிறார். இவர்கள் பல கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரில், மூன்று நாட்களுக்கு முன் வருமானவரித்துறை, ஜி.எஸ்.டி., அமலாக்கத்துறை அதிகாரிகள், 50 பேர் கொண்ட குழுவினர், 25க்கும் மேற்பட்ட கார்களில் சங்கரின் வீடு, கிடங்கிற்கு சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் கிடங்கு பூட்டை உடைத்து சோதனை செய்தனர். நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு ராஜராஜேஸ்வரி, அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம் இரவு, 11:00 மணிக்கு மேலும் விசாரணை நடத்தினர். சங்கர் நேற்று மதியம், 12:00 மணிக்கு வீட்டிற்கு வந்து விசாரணை அதிகாரிகள் முன் ஆஜரானார். சங்கரிடம் விசாரித்த அதிகாரிகள், அவரை காரில், திருமலாபுரத்தில் உள்ள அவரது கார் டிரைவர் வடிவேலு வீட்டிற்கு அழைத்து சென்றனர். வடிவேல் அங்கு இல்லாததால் மீண்டும் சங்கரின் வீட்டிற்கு திரும்பினர். பின் துவங்கிய விசாரணை இரவு, 7:00 மணிக்கு மேலும் நீடித்தது. ஏலக்காய் மூடைகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதில் முறைகேடு செய்து, 70 கோடி ரூபாய்க்கு மேல் அவர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Palanisamy T
டிச 09, 2025 12:57

இதற்காக பாஜக நல்ல கட்சி, தவெக அதிமுக நல்ல கட்சி என்று எண்ணி. நம்மக்கள் இவர்களிடம இனி ஏமாந்துப்போய்விடவேண்டாம். நடிகரகளை நம்பி திரைப் பட ரசிகர்களை நம்பி நாடு கொஞ்சம் கொஞ்சமாக நாசமான பாதையில் போய்க் கொண்டுருக்கின்றது . யாராக இருந்தாலும் நல்லவர்களாக இருந்தால் மட்டும் தேர்வு செய்யுங்கள். இப்போ எவன்நல்லவன் எவன் கெட்டவனென்று தெரியவில்லை . தேர்தலில் நிற்கின்றவன் கட்சி நிதிக் கொடுக்காமல் நிற்கமுடியாது ..அப்படி யென்றால் என்ன,அர்த்தம் புரிந்துக் கொண்டால் மகிழ்ச்சி .


V K
டிச 09, 2025 12:03

திராவிட மாடல் என்றால் என்ன என்று பல பேர் கேட்டார்கள் இப்போ தெரிகிறதா திராவிட மாடல் என்றால் என்று


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 09, 2025 11:47

இந்த எழுபது கோடி மோசடி குறித்து சங்கர் அவர்களுக்கு, வருமான வரித்துறை ஜி எஸ் டி துறை, மற்றும் அமலாக்கத்துறை மூவரும் இணைந்து ஓர் கடிதம் எழுதலாமே


Sudha
டிச 09, 2025 11:13

ஒரு குழந்தை பிறக்கும் போது தாயும் பிறக்கிறாள் என்று சோல்வார்கள், ஓர் ஊழல் கண்டுபிடிக்க படும் போது ஊழல் நிறைந்த பின்புறமும், செய்ய தவறிய தணிக்கை துறைகளும் கண்டறிய பட வேண்டும்


Sudha
டிச 09, 2025 11:08

நாட்டுக்கு இவ்வளவு இழப்பு ஏற்படுத்தும் இவர்களுக்கு என்ன தண்டனை?


Palanisamy T
டிச 09, 2025 11:02

இதற்காக பாஜக நல்லக் கட்சி, அதிமுக, தveka


Premanathan S
டிச 09, 2025 09:44

நல்ல திறமைசாலி கட்சிக்கு உன்மையாய் இருக்கும் இவர் அடுத்து MLA சீட்டுக்கு தகுதியானவர்


V RAMASWAMY
டிச 09, 2025 08:35

இந்தக்கட்சி சம்பந்தப்பட்ட எவராயினும் பஞ்சாயத்து போர்டு மெம்பராயினும் ஊழலும் சுருட்டலும் இல்லாமலும் இருக்கமுடியாதோ?


VSMani
டிச 09, 2025 10:34

தலைவனின் ரத்தத்தில் ஊறிய ஊழல் அடிமட்டத்தொண்டனின் ரத்தத்திலும் இருக்கும். ஊழலுக்கென்றே உருவாக்கப்பட்ட கட்சி.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 09, 2025 11:45

கட்சியில் அடிப்படை உறுப்பினராக தகுதியே அதுதான்.


Palanisamy T
டிச 09, 2025 08:34

ஒரு மாநகராட்சி தலைவர் வீட்டில் இவ்வளவு தொகையா திமுக வரும் தேர்தலில் தோற்க்குமென்று. மக்கள் அச்சப்பட வேண்டாம்..தலைவரே உறுதியாக சொல்லிவிட்டார்..அடுத்து தமிழகத்தை ஆளப் போவது உதய சூரியனென்று. மக்களும் தங்கள் பங்கிற்க்கு வரும் 5 ஆண்டிற்குள். எவ்வளவு ஊழல்கள் செய்து சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்த்து கொள்ளுங்கள் . நல்ல அரிய வாய்ப்பை காலம் உங்களுக்கு இப்போது தந்துள்ளது.


VENKATASUBRAMANIAN
டிச 09, 2025 08:13

ஒரு கவுன்சிலரே இப்படி என்றால் மற்றவர்கள். இதுதான் திராவிட மாடல்


சமீபத்திய செய்தி