உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமலர் சார்பில் 26ல் நீட் மாதிரி தேர்வு கருத்தரங்கிற்கு முன்பதிவு நிறைவு

தினமலர் சார்பில் 26ல் நீட் மாதிரி தேர்வு கருத்தரங்கிற்கு முன்பதிவு நிறைவு

சென்னை:'தினமலர்' நாளிதழ் சார்பில், வரும், 26ம் தேதி சென்னையில் நடக்க உள்ள, 'நீட்' மாதிரித்தேர்வு மற்றும் கருத்தரங்கிற்கான முன்பதிவு நிறைவடைந்துள்ளது.பிளஸ் 2 முடித்த பெரும்பாலான மாணவர்களின், உயரிய கனவுகளில் ஒன்றாக மருத்துவ படிப்பு உள்ளது. அதற்கு வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழ், ராஜலட்சுமி மருத்துவ கல்லுாரி இணைந்து, வரும், 26ம் தேதி காலை 8:00 முதல் மதியம் 1:30 மணி வரை, சென்னை கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில், 'நீட்' மாதிரி தேர்வை நடத்துகின்றன. அத்துடன், தேர்வு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடைபெற உள்ளது. இதில், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி, தேர்வு குறித்த ஆலோசனைகள் வழங்க உள்ளார்.நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஆலோசனைகள், பாடங்களை புரிந்து கொள்வதற்கான வழிகாட்டுதல்களை நிபுணர்கள் வழங்குவர்ஒவ்வொரு மருத்துவ படிப்புக்கும் தேவையான தகுதிகள், மதிப்பெண்கள் அடிப்படையிலான வாய்ப்புகள், சிறந்த மருத்துவ கல்லுாரிகள் குறித்த தகவல்கள் வழங்கப்படும். இதனால், மாணவர்களும், பெற்றோரும் குழப்பம் அடைவதை தவிர்க்கலாம்நிகழ்ச்சியில் நடத்தப்படும் நீட் மாதிரி தேர்வில், தேசிய அளவிலான வினாக்கள் இடம் பெறும். இதனால், மாணவர்கள் தங்களின் திறனை அறிவதோடு, நுண்ணறிவையும் பெற முடியும்தேர்வின் அடிப்படையில் தனித்தனி மதிப்பீட்டு அறிக்கை வழங்கப்படும். அதன் வாயிலாக மாணவர்கள், தங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறியலாம்ஆர்.ஜி.ஆர்., அகாடமி இணைந்து வழங்கும், இந்நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தரும் வகையில், மாதிரி தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெறுவோருக்கு பரிசு வழங்கப்படும்.

விதிமுறைகள்

மாணவர்கள், புகைப்படத்துடன் கூடிய, அசல் அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்விடையளிக்கும் வகையில், கருப்பு மை பால் பாயின்ட் பேனா எடுத்து வர வேண்டும்ஒளி புகும் தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்து வரலாம்மொபைல் போன் எடுத்து வர அனுமதி இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை