உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதிவு செய்த பத்திரம் தருவதற்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம்: சிக்கினார் சார் பதிவாளர்!

பதிவு செய்த பத்திரம் தருவதற்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம்: சிக்கினார் சார் பதிவாளர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காரைக்குடி: பதிவு செய்த பத்திரத்தை தராமல் இழுத்தடித்து, 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காரைக்குடி சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.காரைக்குடியில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காரைக்குடி கண்டனுார் ரோடை சேர்ந்த வைரவேல் என்பவர் பத்திரப்பதிவுக்காக வந்துள்ளார். பத்திரப்பதிவு முடிந்து பல நாட்கள் ஆகியும் பத்திரம் வழங்கப்படவில்லை. பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைரவேல் கேட்டபோது, 60,000 ரூபாய் கொடுத்தால் தான் பத்திரம் தர முடியும் என சார் பதிவாளர் முத்துப்பாண்டி, 36, தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக வைரவேல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பத்திரப் பதிவு அலுவலகம் சென்ற வைரவேல், சார் பதிவாளர் முத்துப்பாண்டியிடம் பணத்தை கொடுத்தார். அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் ஜேசுதாஸ், கண்ணன், எஸ்.ஐ., ராஜா முஹம்மது மற்றும் போலீசார், முத்துப்பாண்டி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பத்திர எழுத்தர் புவனப்பிரியாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

rama adhavan
நவ 19, 2024 23:42

பத்திரபதிவு துறையில் காசு இல்லாமல் ஒரு பத்திரமோ, உயிலோ, திருமண சான்றோ பதியமுடியாது /பெறமுடியாது. இது எல்லாருக்கும் தெரியும். எனது திருமண சான்றுக்கு, சென்னையில் 3 ஆண்டுக்கு முன்பு நெடுங்கால பதிவு துறை நண்பர் கூட இருந்து முடித்து கொடுத்ததும் ரூ. 3000 லஞ்சம் வாங்கினர். எனது நெருங்கிய உறவினரிடம் சென்னையில் அதே திருமண சான்றுக்கு வேறு அலுவலகத்தில் முகவர் மூலம் ரூ. 8000 இதே காலத்தில் வாங்கினர்.


Gobinathan
நவ 18, 2024 19:47

பணம் பணம் பணம் பேராசை ஆணவம் கூடாது


ராஜ்
நவ 17, 2024 06:55

மாபெரும் சாதனை. 100 கோடி செலவில் மகனுக்கு திருமணம் செய்து வைத்த உத்திரப்பதிவுத்துறை மந்திரி பூர்த்தி வீட்டில் ரெய்டு போங்க


Mani . V
நவ 17, 2024 05:35

அட போங்கய்யா நீங்களும், உங்கள் சட்டமும். இது போன்ற சமூக விரோதி ஒருவரை என்கவுண்டரில் போட்டுத் தள்ளினால் அடுத்த நாய்க்கு பயம் வரும். ஒரு எழவும் செய்யாமல் விட்டால் மற்றவர்களுக்கு எப்படி பயம் வரும்.


Parasumanna Sokkaiyer Kannan
நவ 17, 2024 04:23

We have a thoroughly useless government in Delhi. They are compromised with corruption. So how they eradicate? So State government is singing a song.


David DS
நவ 16, 2024 19:56

கோவில்பட்டி தாலுகா ஆபிஸ் பக்கம் எல்லாம் லஞ்ச ஒழிப்புத் துறை போகாதா


suriyanarayanan
நவ 16, 2024 18:42

பாஸ்போர்ட் எப்படி நாம் வாங்குகிறோம் அல்லது ரினிவல் செய்கிறோமோ அதே மாதிரி இந்த பத்திர பதிவு கொண்டு வரவேண்டும் என்னதான் சிசிடீவி போலீஸ் ரெய்டு இது எல்லாம் கண் துடைப்பு பத்திர பதிவு என்பது 200% உண்மையாக சுத்தமானதாக இருக்க வேண்டும் .


அப்பாவி
நவ 16, 2024 17:31

இவன் மூஞ்சியெல்லாம் பாக்கறதுக்கே பகல் கொள்ள்ளைக்காரன் மாதிரி இருக்கே.


rama adhavan
நவ 19, 2024 23:45

பகல் கொள்ளையன் அழகாக, டீக்காக இருப்பான். இவர்கள் மஹா கேவலம். பிணம் தின்னி கழுகுகள்.


Perumal Pillai
நவ 16, 2024 16:23

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சப் ரிஜிஸ்டர் ஆபீஸ் இல் மாமூல் பயங்கரமாக நடக்கிறது .இதையும் கவனிங்க ஆஃபீசர். அந்த ஸ்கூட்டர் ரை மாலை ஆறு மணிக்கு மேலே ரெய்டு பண்ணுங்கள் . எல்லாம் பணமயம் .செல்வி மயம் .


Narayanasamy
நவ 16, 2024 15:05

இந்த பத்திரம் சட்டப்படி பதிய முடியுமா முடியாதா என்பது பத்திரப்பதிவு எழுத்தருக்கு தெரியாதா பதிய முடியும் என்றால் சார் பதிவாளருக்கு ஏன் லஞ்சம் வாங்கித் தர வேண்டும் சட்டப்படியான நடைமுறைகள் பத்திரிப்பது எழுத்தாளர்களுக்கு தெரிவதில்லை இது எந்த பத்திரத்தை கொண்டு காட்டினாலும் அதை கொண்டு போய் சார்பாகவும் காட்டுகிறார்கள் அவர் கேட்ட தொகையை வாங்கி கொடுத்து பதிவு செய்கிறார்கள் இதுதான் நடக்கிறது பத்திரப்பதிவு எழுத்தர் சட்டப்படி நடந்தால் எதற்காக லஞ்சம் வாங்கி கொடுக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை