உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேற்கு மாம்பலத்தில் வீடு புகுந்த திருடர்கள்; நெதர்லாந்தில் ஒலித்த அலாரத்தால் சிக்கினர்

மேற்கு மாம்பலத்தில் வீடு புகுந்த திருடர்கள்; நெதர்லாந்தில் ஒலித்த அலாரத்தால் சிக்கினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மேற்கு மாம்பலத்தில் வீடு புகுந்து திருடிய இருவர், நெதர்லாந்து நாட்டிற்கு சென்றிருந்த வீட்டு உரிமையாளரின் மொபைல் போனில் ஒலித்த அலாரத்தால் வசமாக சிக்கினர்.சென்னை,மேற்கு மாம்பலம், சீனிவாச பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணன், 58. இவர், கடந்த 4ம் தேதி மனைவி கலாவுடன், வடமேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டில் பணிபுரியும் மகனை பார்க்க சென்றுள்ளார்.இந்த நிலையில், நேற்று அதிகாலை மேற்கு மாம்பலத்தில் பூட்டியிருக்கும் வீட்டில் யாரோ மோட்டார் போடுவதாக, நெதர்லாந்தில் உள்ள வெங்கட்ரமணனின் மொபைல் போனில் அலாரம் அடித்துள்ளது.அதிர்ச்சியடைந்தவர், மொபைல் போன் வாயிலாக வீட்டில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை கண்காணித்தார். அப்போது, வீட்டில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பது உறுதியானது.இது குறித்து, பக்கத்து வீட்டுக்காரரான ஓய்வு பெற்ற தனியார் வங்கி மேலாளர் வெங்கட் சுப்ரமணியன் என்பவர் உதவியுடன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு, அசோக் நகர் ரோந்து போலீசார் விரைந்து வந்தனர். இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்த திருடர்கள் இருவரும், வீட்டில் இருந்து தப்பித்து சென்று, பக்கத்து தெருவான பக்தவச்சலம் தெருவில் பதுங்கினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.விசாரணையில், பிடிபட்டவர்கள், பல்லாவரத்தைச் சேர்ந்த கமலகண்ணன், 65, திருப்பத்துாரைச் சேர்ந்த ஆரி பிலிப், 57, என, தெரியவந்தது.இருவரும், வெங்கட்ரமணனின் வீட்டில் இருந்து திருடிய, 6 சவரன் நகை, 1.50 கிலோ வெள்ளி, 27 டாலர் நோட்டுகள், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இரண்டு சிறிய ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.விசாரணையில் தெரிய வந்ததாவது:வெங்கட்ரமணன் வீட்டின் எதிரே உள்ள ஆடிட்டிங் அலுவலகத்தின் பூட்டை உடைத்து, இருவரும் திருட முயன்று உள்ளனர்.அங்கு 'லேப்டாப்'கள் மட்டுமே இருந்ததால், அங்கு திருடாமல் வெளியேறி, வெங்கட்ரமணன் வீட்டில் புகுந்து திருடியது தெரிய வந்தது.அப்போது, போலீஸ் வருவதை அறிந்து, ஆரி பிலிப் என்பவர் சுற்றுச்சுவர் ஏறி குதித்தபோது, அங்கு இருந்த சிறிய கம்பி குத்தியதில், இடது கண் புருவத்தில் லேசான காயமடைந்தார். போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Ramesh Kumar
ஏப் 08, 2025 14:28

House owner is highly sensitive & intelligent


Ram Moorthy
ஏப் 08, 2025 14:14

திருடி விஷ சாராயம் குடித்து சாக வேண்டும் உழைத்து சம்பாதித்தவர்கள் திருடு கொடுத்து ஓட்டாடி ஆகி புலம்ப வேண்டுமா


Mecca Shivan
ஏப் 08, 2025 10:15

உழைக்காமல் திருடி சம்பாதிப்பது யாரு உழைத்து சம்பாதிப்பது யாரு என்று கிரிப்டோ திராவிடர்களுக்கு இப்போதாவது புரியவேண்டும்.. திருடர்கள்தான் உழைப்பவர்கள் என்றால் திராவிடர்கள் யாரு என்று மக்களும் புரிந்துகொள்வார்கள்


Yes your honor
ஏப் 08, 2025 09:11

போலீசார் திருப்பி கொடுத்ததாக கூறப்படும் லிஸ்ட் ஒரு பார்ட்டாக கூட இருக்கலாம். பிடிபட்ட நகை 60 சவரனாகக் கூட இருக்கலாம், மனமுவந்து திருப்பிக்கொடுத்தது 6 சவரனாக இருக்கலாம். நமக்குத்தான் நம் திராவிட போலீசாரைப் பற்றி நன்றாகத் தெரியுமே. லலிதா ஜுவல்லரி திருட்டு வழக்கில் திருடியவன் கூறிய ஸ்டேட்மெண்டை நாம் மீடியாவில் பார்த்தோமே.


Sampath Kumar
ஏப் 08, 2025 08:35

லோ டெக் திருடர்கள் ஹை டெக் வீடு சென்னைவாசிகளுக்கு கவலை இல்லை ஏரியா மக்கள் தான் பாவம்


R SRINIVASAN
ஏப் 08, 2025 08:08

தமிழ் நாட்டில் யாரும் உழைத்து பிழைக்க தயாரில்லை. 1960-களில் பெண்கள் கடினமாக வேலை செய்வார்கள் .ஆனால் இப்பொழுது பெண்கள் வேலைக்கு சென்றவுடன் சொகுசாக வாழவே விரும்புகிறார்கள். இதனால் குழந்தைகள் பொறுப்பின்றி வளர்கிறார்கள். கெட்டுப்போகிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் ஏழை பெண்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து அவர்களையும் ஆக்க பூர்வமான செயல்களில் ஈடு படுத்தினால் நிறைய குடும்பங்கள் முன்னேறும் .இந்த தேர்தலில் தமிழ் நாட்டில் மதுவை முற்றிலுமாக ஒழிப்பதாக பிஜேபி வாக்குறுதி அளித்தால் கண்டிப்பாக பிஜேபி வேற்றி பெறும்.


Srinivasan Krishnamoorthy
ஏப் 08, 2025 10:58

prohibition is impractical, Jayalalithaa did consider all options. how can state government can loose 40000-50000 crores annully, how can you compensate that revenue by other means without burdening people.no other choice, people need to be disciplined as done in other western countries


Kalyanaraman
ஏப் 08, 2025 08:06

திருடி மீட்கப்பட்ட பொருளின் மதிப்பில் பாதியையாவது போலீஸ்காரன் புடுங்காமல் விடமாட்டான். கொடுக்கவில்லை என்றால் இழுத்தடித்துக் கொண்டே இருப்பான். இதில் பெரிய திருடன் போலீஸ் காரன்தான்.


S.V.Srinivasan
ஏப் 08, 2025 07:52

இந்த வயசான காலத்துல எதுக்கு வேண்டாத தொழில். உழைச்சு சம்பாதிங்க.


RAJ
ஏப் 08, 2025 07:42

ரொம்ப வருஷம் இந்த வேலைய fulltime பார்கிறாங்கு போல இருக்கு. போட்டு பொளந்தா .. நிறைய விஷயம் கிடைக்கும்.. அப்டியே ஓடவிட்டு பின்பக்கம் குறிவச்சு சுட்ருங்க போலீஸ்கர்..


kumar
ஏப் 08, 2025 06:56

அப்பா இது மாதிரி திருடர்கள் மறுவாழ்வு பெற ஏதாவது செய்யுங்க...


Pandi Muni
ஏப் 08, 2025 11:42

அப்பா போலவே மகன்களும் இருக்க மறுவாழ்வு ஏது


சமீபத்திய செய்தி