உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விபத்தில் கால் இழந்த டிரைவருக்கு இழப்பீடு வழங்காததால் பஸ்கள் ஜப்தி

விபத்தில் கால் இழந்த டிரைவருக்கு இழப்பீடு வழங்காததால் பஸ்கள் ஜப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: விபத்தில் வலது கால் இழந்த டிரைவருக்கு, அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால், இரண்டு புதிய பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.கோவை, ஆலாந்துறை அருகேயுள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் பகவதி,30; லாரி டிரைவர். இவர், 2020, ஜன., 31ல், அங்குள்ள ரோட்டில் பைக்கில் சென்ற போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதி, காலில் முறிவு ஏற்பட்டது.சிகிச்சை பலனளிக்காததால், காலை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஒரு கால் இல்லாத நிலையில், அவரால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.இதனால் கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க கோரி, எம்.சி.ஓ.பி., சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், பகவதிக்கு 28 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, 2023 ஜூன் 12ல் உத்தரவிட்டது. அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க தவறியதால், வக்கீல் பி.ரங்கராஜூ வாயிலாக, அதே கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.வட்டியுடன் சேர்த்து, 31 லட்சம் ரூபாய் வழங்க கோரி, மனுதாக்கல் செய்தார். இதையடுத்து அரசு பஸ்சை, ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, ரயில்வே ஸ்டேஷன் - கணுவாய் செல்லும் (தடம் எண்:11) இரண்டு புதிய பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டு, நேற்று கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. இதனால், இந்த பஸ்களை நம்பியிருந்த பொதுமக்கள், அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

N Srinivasan
ஏப் 02, 2025 16:07

பரவாயில்லை ஜப்தி எடுத்தது ஒரு புதிய பேருந்து ஓட்டை உடைசல் பேருந்து அல்ல


Tiruchanur
ஏப் 02, 2025 13:15

திருட்டு the vidiyal திராவிடம். இப்படிதான் இருக்கும்


Anantharaman Srinivasan
ஏப் 02, 2025 13:01

விளம்பர பிரியர்கள் ஆட்சியில் கோர்ட் தீர்ப்புக்கு அவ்வளவு தான் மதிப்பு. இரண்டு பஸ்ளை ஜப்தி செய்ததுக்கு பதிலாக ஆறு மந்திரிகளின் காரை ஜப்தி செய்திருக்க வேண்டும்.


Sankare Eswar
ஏப் 02, 2025 11:56

திராவிட கொம்பன் ஆட்சி


ஆரூர் ரங்
ஏப் 02, 2025 11:10

மக்கள் விரோத ஆட்சி அமைவதற்கு அரசு ஊழியர்கள்தான் முக்கிய காரணம். எனவே அவர் மீது அனுதாபமே ஏற்படவில்லை.


Venkateswaran Rajaram
ஏப் 02, 2025 11:54

அவர் லாரி டிரைவர் ,அரசு வேலை இல்லை ....


Varadarajan Nagarajan
ஏப் 02, 2025 10:32

எந்த கழகம் ஆட்சியிலிருந்தாலும் அரசு போக்குவரத்துக்கழகத்தின் நிலைமை கவலைக்கிடம்தான். போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் முறையாக கிடைப்பதில்லை. மோட்டார்வாகனங்களுக்கு உரிய காப்பீடு இல்லாமல் சாலையில் இயக்கக்கூடாது என்ற விதி அரசு போக்குவரத்துக்கழக வாகனங்களுக்கும் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். அப்பொழுதுதான் விபத்துக்களினால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நிவாரணம் உரிய காலத்தில் கிடைக்கும். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அது அரசுக்கும் சேர்த்துத்தான்.