உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழிகாட்டி மதிப்பை 30 % உயர்த்தி வாங்குங்கள் சார்-பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு

வழிகாட்டி மதிப்பை 30 % உயர்த்தி வாங்குங்கள் சார்-பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு

சென்னை: அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றி, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 30 சதவீதம் வரை, பதிவுத்துறை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நிலங்களுக்கு, 'சர்வே' எண் மற்றும் தெரு வாரியாக வழிகாட்டி மதிப்புகளை, பதிவுத்துறை நிர்ணயிக்கிறது. இந்த மதிப்புகள் அடிப்படையில், சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படும். கடந்த, 2012ம் ஆண்டு தான் வழிகாட்டி மதிப்புகள், ஒட்டுமொத்தமாக சீரமைக்கப்பட்டன. அதன்பின், அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த 2023ல் நடைமுறையில் இருந்த வழிகாட்டி மதிப்பில், 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதற்கான காரணமாக, வழிகாட்டி மதிப்புகளில் காணப்பட்ட வேறுபாடுகள் சரி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், 2012க்கு பின் வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்படவில்லை என்ற கருத்தில், பதிவுத்துறை அதிகாரிகள் இருக்கின்றனர். அதே நேரம், வழிகாட்டி மதிப்புகளை சீரமைக்க, உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுதும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமின்றி, வழிகாட்டி மதிப்புகள், 30 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளன. சமீபத்தில் நடந்த சீராய்வு கூட்டங்களில், புதிதாக பதிவுக்கு பத்திரங்கள் வரும் போது, வழிகாட்டி மதிப்பை 30 சதவீ தம் வரை உயர்த்தி, அதற்கு ஏற்ப முத்திரை தீர்வை, கட்டணங்களை வசூலியுங்கள் என, துறை அமைச்சர் மூர்த்தி வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளார். அமைச்சர் உத்தரவை, அறிவிப்பின்றி அமல்படுத்தும் போது, பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர் என, சார் - பதிவாளர்கள் கூறுகின்றனர்.

பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நிலங்களின் சந்தை மதிப்பு வெகுவாக உயர்ந்து வரும் நிலையில், சிலர் தனிப்பட்ட தேவைகளுக்காக, வழிகாட்டி மதிப்பை விட, கூடுதல் மதிப்பில் பத்திரங்களை பதிகின்றனர். இதை ஆதாரமாக வைத்து, அந்தந்த பகுதிக்கான வழிகாட்டி மதிப்புகளை, 30 சதவீதம் வரை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய மதிப்புகளை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், புதிதாக சொத்து பத்திரங்களை பதிவு செய்வோர், இணையதளத்தில் உள்ளதை விட கூடுதல் மதிப்பை, சார் - பதிவாளர் தெரிவிக்கும் போது அதிர்ச்சி அடைகின்றனர். சொத்துக்களின் சந்தை மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ள நிலையில், வழிகாட்டி மதிப்புகள் உயர்வதை தவிர்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Joe Rathinam
செப் 24, 2025 15:12

நிலத்தின் வழிகாட்டி மதிப்பு அல்லது சந்தை மதிப்பு இவற்றில் எது அதிகம் அதன் மதிப்பில் பதிவு செய்தால் கருப்பு பணத்தை குறைக்கலாம்.


KRISHNAN R
செப் 23, 2025 11:08

சரி இங்கும் டிரம்ப்


Muthukumaran
செப் 23, 2025 10:58

சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதற்கு காண என்ன அளவுகோல் உள்ளது. அதை குறிப்பிட்டு வழிகாட்டு மதிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் எந்த சட்டப்பிரிவு வாய்மொழி உத்திரவு அளிக்க அதிகாரம் வழங்கியுள்ளது. மதிப்பு குறித்த சந்தேகத்தின் பேரில் நிறுத்தி வைக்கப்படூம் இனங்களில் 47எ மூலம் மறு மதிப்பீடு செய்யப் படுகிறது. அதையே 47எ அதிகாரம் பெற்ற அதிகாரிகளிடம் சான்று பெற்றுவர அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம். எப்படியானாலும் கையூட்டு குறையப் போவதில்லை. இதை வழக்காக யாரும் கொண்டு போகவில்லை போல் தெரிகிறது. 2026 தேர்தலுக்குமுன் அனுபவிக்க வேண்டிய துன்பப் பட்டியலில் இதுவும் இணைகிறது.


karthik
செப் 23, 2025 10:49

இந்த கொள்ளை கும்பல் ஆட்சிக்கு வந்தாலே இப்படி எல்லாம் நடக்கும்.. தமிழக மக்கள் எப்போது புரிந்துகொண்டு இந்த கூட்டத்தை வேரோடு தூக்கி இருக்கிறார்களோ அப்போது தான் தமிழ் நாடு உருப்படும்


N Annamalai
செப் 23, 2025 10:32

வாய்மொழி உத்தரவு சட்டமாக முடியாது? சட்டமன்றத்தில் சட்டம் போட வேண்டும் .இல்லை என்றால் லஞ்சம் அதிகம் ஆகும் .


Kanns
செப் 23, 2025 07:51

Govts are MegaLooting People for Providing NIL Services Only Entering in Regn Records-Not Even RevenueRecords for Feeding OverFattened Govt Officials


R SRINIVASAN
செப் 23, 2025 07:45

தமிழக முதல்வர் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையின் புற நகர் பகுதியில் ஒரு sq.ft ரேட் Rs.27 என்று 2002-இல் மதிப்பிடப்பட்டது. அதே மதிப்பீட்டு வழி காட்டி 2017-இல் Rs. 1005 per sq.ft என்று உயர்த்தப்பட்டது. 2025-il அந்த பகுதியில் Rs.1650 per sq.ft என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இதனால் incometax act-il மூலதன வரியும் உயர்ந்து விட்டது. நடுத்தர மக்கள் அவசர தேவைகளுக்காக சொத்தை வித்தால் வரியே நிறைய கட்ட வேண்டியிருக்கிறது.


GMM
செப் 23, 2025 07:27

நிலங்களின் சந்தை மதிப்பு அரசின் அபிவிருத்தி பணிகளுக்கு ஏற்ப உயரும். தனிப்பட்ட தேவைகளுக்காக, வழிகாட்டி மதிப்பை விட, கூடுதல் மதிப்பில் பத்திரங்களை பதிவு செய்ய முடியுமா? வழிகாட்டி மதிப்பு ஒரு நிர்வாக குளறுபடி. மறு விற்பனையில் அதிக மோசடி. தேவைக்கு தான் நிலம், வீடு வாங்குவர். மறு விற்பனை அனுமதியை நிறுத்த வேண்டும் அல்லது அரசு வழிகாட்டு விலையில் கிரயம் பெற்று, ஏலம் விட்டு, அதிக பணத்தை கருவூலத்தில் சேர்க்க வேண்டும்.


உண்மை கசக்கும்
செப் 23, 2025 06:47

பக்கத்தில் உள்ள கேரளாவில் வழிகாட்டு முறையில் உள்ள மதிப்பில் தான் விற்க படுகிறது. அங்கு கறுப்பு பணம் என்பதும் இல்லை பதிவாளர்களுக்கு லஞ்சம் என்பதும் இல்லை. உம். தமிழ்நாட்டில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்படுகிறது வாங்கப்படுகிறது. இரண்டு திருடர் கட்சிகளும் பதிவுத்துறை அலுவலகத்தை பணத்தை கொட்டும் ஒரு காமதேனுவாக மாற்றி விட்டார்கள்.


சிட்டுக்குருவி
செப் 23, 2025 06:13

நகராட்சி ,மாநகராட்சிகளில் வழிகாட்டி மதிப்பிடுவதை நிறுத்தவேண்டும் .விற்பனைவிலைக்கே பதிவுகள் செய்யவேண்டும் .விற்பனை விலைக்கு குறைந்து பதிவு செய்யும் சொத்துக்களை பறிமுதல் செய்து போது ஏலத்தில் விடப்படும் என்ற சட்டம் இயற்றவேண்டும் .அப்படி சட்டம் இயற்றும் போது பதிவு கட்டணத்தை பாதியாக குறைக்கவேண்டும் .செய்தால் பதிவுத்துறை வருமானம் பலமடங்கு கூடும் .மக்களுக்கு சொத்துக்களின் மதிப்பு கூடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை