உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் விழாவின் போது சிஏ தேர்வு: நிர்மலா சீதாராமன் பதிலால் பரபரப்பு

பொங்கல் விழாவின் போது சிஏ தேர்வு: நிர்மலா சீதாராமன் பதிலால் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொங்கல் பண்டிகையின் போது, 'சிஏ' தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு, தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 'எப்போது பார்த்தாலும் தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகி விட்டது' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக தெரிவித்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.'சிஏ' தேர்வு அட்டவணை தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை:பொங்கல் பண்டிகை தினமான ஜனவரி 14 மற்றும் 16ம் தேதிகளில், 'சிஏ' தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பொங்கல் திருவிழா என்பது, தமிழகத்தின் தனித்துவமிக்க பண்பாட்டு திருவிழா. இதை கருத்தில் வைத்து, தேர்வர்களுக்கு சிரமமின்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ஐ.சி.ஏ.ஐ., தலைவர் ரஞ்சித்குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதி உள்ளேன்.பொங்கல் அன்று தேர்வுகள்; எத்தனை முறை சொன்னாலும் திருந்தப் போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதும் இல்லை. மத்திய அரசே தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதேபோல, தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உட்பட பலரும் வலியுறுத்தி உள்ளனர். தி.மு.க., மாணவர் அணி தலைவர் ராஜிவ்காந்தி, 'பொங்கல் அன்று சி.ஏ., பவுண்டேஷன் தேர்வுகளை மத்திய அரசு நடத்துகிறது; தீபாவளி அன்று தேர்வு நடத்துவீர்களா' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.இதற்கு, பா.ஜ., மாநில செயலர் எஸ்.ஜி.சூர்யா பதில் அளித்துள்ளார். அதில், 'இதே பொங்கல் தான் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி; வட மாநிலங்களில் லோஹ்ரி; உ.பி.,யில் கிச்சடி; குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணி; ஹரியானா, பஞ்சாபில் மாஹி என்று கொண்டாடப்படுகிறது. எனவே, பொங்கல் தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுதும் கொண்டாடப்படும் தேசிய பண்டிகையாகும். உங்கள் கோட்பாட்டின்படி, பா.ஜ., அனைத்து மாநிலங்களுக்கும் எதிரானதா.மேலும், சி.ஏ., தேர்வு தேதியை மத்திய அரசு முடிவு செய்வதில்லை; ஐ.சி.ஏ.ஐ., என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு நடத்துகிறது. அவ்வமைப்பு தான் தேர்வுக்கான தேதியை தீர்மானித்து அறிவிக்கிறது. மற்றபடி, நிதி அமைச்சகத்துக்கும், இந்த நடைமுறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தொழில் முறை பாடத்தேர்வுகளுக்கு ஏன் இத்தகைய விடுமுறை நாட்கள் தேர்வு செய்யப்படுகின்றன என்பது, தொழில் வல்லுனர்களுக்கு மட்டுமே தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார்.அவரது பதிவை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, 'சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லி இருக்கீங்க சூர்யா. எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும், தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகி விட்டது' என்று கூறியுள்ளார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 98 )

skv srinivasankrishnaveni
டிச 20, 2024 09:24

சி ஏ தேர்வுகளை எழுதும் மாணவர்கள் எல்லாம் நன்னாவே மெச்சுரட் மாணவர்களேதான் அவா எப்போதும் தேர்வுகள் எழுத தயாராகவே இருப்பாங்க வேண்டாத குசும்பு செயறதே படிப்பு ஏறாத கூமுட்டைகளே தான் எதற்கும் muttukkattai poduvadhe கொள்கை ன்று அலையும் கூட்டம் கூச்சல் போடும் இந்தக் கும்பல்லே எவ்ளோ பேருடைய வாரிசுகள் தேர்வு ELUTHAPPORAANGKA


Sampath Kumar
டிச 05, 2024 16:52

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் வரை அணைத்து பொது துறை நிர்வாகத்தையும் யாரு நிர்வகிப்பது ?/அதனுள் மூக்கை உழைத்து உங்கள் அரசுக்கு சாதகமாக செயல் அட இதுது யாரு சும்மா பதில்ரூம்ப புத்திசாலி தனமாக சொன்னால் மக்கள் ஏற்று வர்கள் என்று நினைப்ப து திட்டமிட்ட அதி என்று ஏதிர் காட்சிகள் சொல்வது சரி


ديفيد رافائيل
டிச 01, 2024 08:08

Autonomous institute எதுவாக இருந்தாலும்கூட government சொன்னா கேட்கனும். Autonomous institute என்பது ஆகாயத்துல இருக்குன்னு சொல்ற மாதிரி இருக்கு இந்த minister சொல்றதை பார்த்தா.


jayvee
நவ 29, 2024 16:07

பண்டிகைநாட்களில் தேர்வு வைக்கவேண்டாம் என்று கேட்பது தமிழர்களின் உரிமை . தன்னாட்சி பெற்ற நிறுவனம் வேறு ஒரு நாட்டின் கட்டுபாட்டிலா உள்ளது ? நிதியமைச்சர் தேவை இல்லாமல் பேசுவதை தவிர்த்தால் தமிழக பிஜேபி க்கு நல்லது


K.n. Dhasarathan
நவ 29, 2024 11:07

நிதி அமைச்சர் இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது அழகல்ல ? பொங்கல் நாளில் தேர்வு வைப்பது பண்டிகையை கொண்டாட விடாமல் தடுப்பது போல, நீங்கள்தான் அந்த தேர்வு நிறுவனத்திற்கு சொல்லி தேதியை மாற்றனும், அதை விடுத்து, முன்பு போல நான் வெங்காயம் பூண்டு சாப்பிடமாட்டேன் என்பது சரியா? எது ஏதற்குத்தான் ஆமாம் போடுவது, கனக்கில்லையா? பிறகு தமிழர் விரோதி என்று சொல்லாமல் தியாகி என்றா சொல்வார்கள்.?


sankaran
நவ 28, 2024 22:53

கார் பார்க்கிங் இடப்பிரச்னை இல்லை ...


AMLA ASOKAN
நவ 26, 2024 19:09

மத்திய நிதி அமைச்சர் பதவி வகிக்கும் ஒருவர் நேரடியாக ஒரு அறிக்கையை வெளியிடாமல் , அறிமுகமில்லாத சூர்யா என்ற நபரின் சமூக வலைதளக் கருத்தை ஆதரித்து பாராட்டுவது ஏற்புடையதல்ல .


Ray
நவ 26, 2024 12:35

• மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமூக வலைதளங்களில் சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லி இருக்கீங்க சூர்யா. எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும், தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகி விட்டது என்று கூறியுள்ளார். • அது தன்னாட்சி நிறுவனமென்றால், இந்த விஷயத்தில் இவர் ஏன் ஆர்வக்கோளாறால் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பானேன்? • எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் தமிழக மக்கள் உணர்வுகளை மதிக்காதது சிலருக்கு பழக்கமாகி விட்டது. • இவரது சில்மிஷம் தோல்வி கண்டுள்ளது என்பதே உண்மை. • சிலர் தயவில் மந்திரியாகிறவர்களுக்கு மாணவர்களின் மனங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை. • எதிர்ப்பில் இருந்த நியாயத்தை உணர முடிந்ததால் ஐ.சி.ஏ.ஐ., என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு 14ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜன.,16ம் தேதிக்கு ஒத்தி வைத்து நிர்மலாவின் முகத்தில் கரி பூசியுள்ளது ஸ்வாரஸ்யம்தான். • இதன் மூலம் மெய்யாகவே அது தன்னாட்சி பெற்ற நிறுவனம்தான் என மெய்ப்பித்துள்ளது பாராட்டாத தக்கது.


deshbhakth
நவ 27, 2024 03:36

அதுல நெஜமாவே நிர்மலா மேடம் ஒன்னும் செய்ய முடியாது படிப்பறிவே இல்லாத d stock. கரிய வேற பூசினதாம். எங்கேந்து வாறீங்கப்பா


சாண்டில்யன்
நவ 27, 2024 08:01

நிதியமைச்சருக்கு நிதி மந்திரி வேலையில் கவனம் செலுத்தவே நேரமிருக்காதே இது போன்ற விஷயங்களுக்கு வலைத்தளங்களில் கருத்து போட்டு பொழுது போக்குகிறாரே அவர் வேலைகளையெல்லாம் GREEN ROOM மில் யாரோ பார்த்துக் கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது


Ray
நவ 26, 2024 06:22

சுதர்சன் ராகவேந்திரன் குடும்பம் பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடுமா என்று தெரிவிக்க வேண்டும்


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 25, 2024 21:58

பொங்கல் பண்டிகை திராவிடர்களின் உயிர் மூச்சு. பொங்கல் பண்டிகையின் போது அரசுக்கு உ பா விற்பனை மூலம் மேலும் கோடிக்கணக்கில் வருவாய் வரும். தொடர்ந்து மூன்று நாட்கள் தொலைக்காட்சி பார்த்தாக வேண்டும். தமிழரின் பரபம்பரியம் அந்த பண்டிகை அதனால் மைய ஒன்றிய அரசு பொங்கல் பண்டிகையின் போது இரயில் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். இரயில் நிறுவனத்தில் பணியாற்றும் திராவிட தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டாமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை