உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வரும் 6ம் தேதி அமைச்சரவை கூட்டம்

 வரும் 6ம் தேதி அமைச்சரவை கூட்டம்

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம், வரும் 6ம் தேதி நடக்க உள்ளது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர், வரும் 20ம் தேதி துவங்க உள்ளது. இக்கூட்டத்தில், முதல் நாளில், கவர்னர் ரவி உரையாற்ற உள்ளார். மூன்று மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எனவே, கவர்னர் உரையில், புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளன. கவர்னர் உரையில், இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவு செய்வதற்காக, தமிழக அமைச்சரவை கூட்டம், வரும் 6ம் தேதி காலை 11:00 மணிக்கு, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலை மையில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், கவர்னர் உரையுடன், சட்டசபை தேர்தல், தொழில் முதலீடு ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை