உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டுக்குள் பாம்பு வந்தால் வனத்துறையை கூப்பிடுங்க

வீட்டுக்குள் பாம்பு வந்தால் வனத்துறையை கூப்பிடுங்க

மழை காலத்தில் வீடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் புகுந்தால், அவற்றை வெளியேற்ற ஆட்களை அழைப்பதற்கான உதவி எண்களை, வனத்துறை வெளியிட்டுள்ளது.

வனத்துறையை கூப்பிடுங்க

தமிழக வனத்துறை அறிவிப்பு: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில், வீடு மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள், பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் நுழைய வாய்ப்புள்ளது. இது குறித்து புகார் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க, வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளில், வனத்துறை அலுவலர்கள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். எனவே, வீடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வந்தால், சென்னையில் இருப்பவர்கள், 1903 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, மதுரை மாவட்டத்தில் வசிப்போர், அந்தந்த மாவட்ட கட்டுப்பாட்டு அறையை, 1077 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை