உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பிரசாரம்: ஓய்வு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் ஆவேசம்

 தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பிரசாரம்: ஓய்வு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கடும் பிரசாரம் மேற்கொள்வேன்,''என, மதுரையில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் துாணில் தீபம் ஏற்றக் கோரியும், தி.மு.க., அரசை கண்டித்தும் டிச., 18ல் மதுரையை சேர்ந்த பூர்ணசந்திரன் தீக்குளித்து இறந்தார். நரிமேட்டில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் நேற்று ஆறுதல் தெரிவித்தார். பின் அவர் கூறியதாவது: பூர்ணசந்திரனை தற்கொலைக்கு துாண்டியதில் முக்கிய பங்கு முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு. தன் குடும்பமே தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் என இறப்பதற்கு முன் பூர்ணசந்திரனே தெரிவித்துள்ளார். பொதுநலத்திற்காக தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் யார் இறந்தாலும் அவர்கள் எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

சிறந்த ஆன்மிகவாதி

பூர்ணசந்திரன் இறப்பை கொச்சைப்படுத்தி, களங்கம் ஏற்படுத்துபவர்கள் கீழ்த்தரமான பிறவிகள். அவர் தி.மு.க.,வை சேர்ந்தவரானாலும் சிறந்த ஆன்மிகவாதி. தன் குழந்தைகளுக்கு கடவுள், தீபம் உள்ளிட்ட படங்களை வரைந்து ஆன்மிக உணர்வை வளர்த்துள்ளார். முருகனுக்கு தீபம் ஏற்றவில்லையே என உயிரையே தியாகம் செய்துள்ளார். அவரது வீட்டிற்கு ஹிந்துக்கள் அனைவரும் ஒருமுறையாவது வர வேண்டும். நான் எந்தக் கட்சி சார்பிலும் இங்கு வரவில்லை. இனி மதுரைக்கு வந்தால் இங்கு வராமல் செல்ல மாட்டேன். அவரது காரிய நாளன்று மதுரையே குலுங்கும் அளவுக்கு முருக பக்தர்கள் அவரது வீட்டுக்கு வரவேண்டும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய செயல்தலைவர் நிதின்நபின், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் என அனைவரும் அஞ்சலி செலுத்த இங்கு வர வேண்டும். தமிழக அரசுக்கு வரியாக ஆண்டுதோறும் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் கோடி கொடுக்கிறோம். அதில் ரூ. 120 கோடியை கையாடல் செய்து வசதியை பெருக்கிக் கொள்கின்றனர். பூர்ணசந்திரனின் 2 குழந்தைகளின் கல்விச் செலவுக்காக நிதி திரட்டுவேன். குழந்தைகளின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி, திரட்டும் நிதியை வைப்புத் தொகையாக செலுத்துவேன். அதில் ஒரு பைசா கூட யாரும் தொட முடியாதபடி செய்வேன்.

கைதிகளாக போலீசார்

கமிஷனராக இருந்திருந்தால் காவல்துறையில் தி.மு.க., அ.தி.மு.க., என 2 பிரிவாக உள்ளனர். கமிஷனர் இடத்தில் நான் இருந்திருந்தால், ''நான் சட்டத்தின் வேலைக்காரன். அரசாங்கத்தின் வாய்மொழி அறிவுறுத்தல்கள் சட்டவிரோதமாக இருக்கும் வரை அரசாங்கத்தின் வேலைக்காரன் அல்ல'' என நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் முதல்வர், உள்துறை அமைச்சருக்கு மெயில் அனுப்பியிருப்பேன். உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் போலீசே கிடையாது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் எனக்கு எதிராக ஒன்னே முக்கால் மணி நேரம் வழக்கறிஞராக வாதாடியவர். எனினும் அவரது நேர்மையான பணிக்கு அவருக்கு ஆதரவாக 2, ஆயிரம் கையெழுத்து என்றாலும் போடுவேன். அவர் எனக்கு துரோகம் செய்தாலும், நான் அவருக்கு நல்லது செய்வேன். சிவகங்கை சமஸ்தானம் வேலு நாச்சியாரின் பரம்பரையை சேர்ந்தவர்கள் என பூர்ணசந்திரன் குடும்பத்தினர் கூறுகின்றனர். வேலு நாச்சியாரின் படத்தை போட்டுக்கொண்டு ஓட்டுக்காக வந்து நிற்கிறான் ஒரு புது பையன். இதெல்லாம் யாரை ஏமாற்றும் வேலை. இத்தகைய சூழலில் அவரது குடும்பத்திற்காக நிற்க வேண்டாமா. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று தலா ரூ.10 லட்சம் கொடுக்கிறார். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் முதல்வர் சார்பில் ஒருவர் கூட ஆறுதல் கூற வரவில்லை. ஓட்டு வங்கிக்காக செயல்படும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக வரும் சட்டசபை தேர்தலில் கடும் பிரசாரம் செய்வேன் என்றார். ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Chandru
டிச 23, 2025 14:38

Hats off to you PMV sir. Wish you all sucess in your noble task. May Lord Subramanya s VEL be with you guiding and guarding.


Chennai B.S
டிச 23, 2025 01:23

அவரது வீட்டிற்கு ஹிந்துக்கள் அனைவரும் ஒருமுறையாவது வர வேண்டும். நான் எந்தக் கட்சி சார்பிலும் இங்கு வரவில்லை. இனி மதுரைக்கு வந்தால் இங்கு வராமல் செல்ல மாட்டேன். அவரது காரிய நாளன்று மதுரையே குலுங்கும் அளவுக்கு முருக பக்தர்கள் அவரது வீட்டுக்கு வரவேண்டும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய செயல்தலைவர் நிதின்நபின், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் என அனைவரும் அஞ்சலி செலுத்த இங்கு வர வேண்டும்.


Suresh
டிச 22, 2025 14:08

ஐயா பொன்மாணிக்கவேல் அவர்கள் பேசியது மிகவும் உணர்ச்சிகரமான அறிவார்ந்த பேச்சு ஆகும். உயிர்த்தியாகம் செய்தவீரரின் இரு குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நிதிதிரட்ட சொல்கிறார். அதை என்னமோ சுயநல அரசியல் போல திரிக்கின்றனர் - மனிததன்மையற்றவர்கள் கேடுகெட்டவர்கள்.


Barakat Ali
டிச 22, 2025 13:44

முற்றிலும் நியாயமான கருத்து, அணுகுமுறை ......


Chennai B.S
டிச 22, 2025 12:17

இவர் கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள கூடியது .


Rathna
டிச 22, 2025 11:45

ஹிந்து முன்னணி, பிஜேபி யை தவிர எந்த கட்சியும் விஜய், அதிமுக போல எந்த எதிர் கட்சியும் அந்த குடும்பத்திற்கு ஆதரவு தரவில்லை. இது தான் போலி செகுலரிஸ்ம். 80% மக்கள் வோட்டு வேண்டும் ஆனால் 20% த்திற்கு தான் ஆதரவு தருவோம் என்ற நிலை. இவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் உதவ வேண்டும். அவர்களை போய் பார்க்க வேண்டும். அதன் மூலம் பிஜேபி மதுரை பகுதியில் பலபட வாய்ப்பு உள்ளது. இதை பிஜேபி செய்யுமா?


Anand
டிச 22, 2025 10:43

திருட்டு திராவிஷத்தின் முகத்திரையை கிழிக்க இப்படிப்பட்ட நெஞ்சுரமிக்கவர்கள் தேவை.


Matt P
டிச 22, 2025 10:33

தவறுகள் செய்கிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற தைரியத்தில் அவர்கள் தவறுகளை செய்து கொண்டே தான் இருப்பார்கள்.


Matt P
டிச 22, 2025 10:29

திமுக ஆட்சிக்கு வந்தால் உதயநிதி முதல்வராவது உறுதி. உதயநிதியின் மகன் துணை முதல்வராவார்.


Matt P
டிச 22, 2025 10:22

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் இப்போதைய துணை முதல்வர், முத்துவேலு மகன் கருணாநிதியின் மகன் ஸ்தாலினின் மகன் உதயநிதி தான் முதலவர் ஆவார் என்று தான் ஆகிறது. ஸ்தாலினின் உடல்நிலை காரணமாக அவர் ஒய்வு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். தமிழக மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் இப்படி ஒரு அடிமை தனம் தேவையா என்று. சுய மரியாதை சுய மரியாதை என்று சொல்லி தமிழக மக்களை சுய மரியாதை இல்லாதவர்கள் ஆக்கி விட்ட்டார்கள். எந்த அமைச்சருக்கும் அங்கே சுய மரியாதை இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை