உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் பவன் கல்யாண் வெல்ல முடியுமா: சேகர்பாபு அமைச்சர் சவால்

சென்னையில் பவன் கல்யாண் வெல்ல முடியுமா: சேகர்பாபு அமைச்சர் சவால்

சென்னை : ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் அளித்த பேட்டி:மதுரையில் நடந்தது, அரசியல் மாநாடு என்பது தான் பக்தர்களின் பார்வை. முருகன் மாநாடு, கூடி கலைந்த மேகக்கூட்டம். ஒருநாள் கூத்து அன்றோடு முடிந்தது.அறநிலையத் துறை எப்படி உருவானது; அதன் கீழ், கோவில்கள் எப்படி வந்தன என்பதை புத்தகமாக அச்சடித்து ஒரு மாதத்தில் வெளியிட உள்ளோம்.கோவில் வருமானத்தை கொள்ளையடித்த கூட்டங்களை வெளியேற்றவே, அறநிலையத்துறை உருவாக்கப்பட்டு, 1959ல் சட்டம் கொண்டுவரப்பட்டது. திருப்பணிகளை மேற்கொண்டு வரும் நாங்கள் வேண்டுமா, அல்லது மேடை போட்டு இனம், மதம், மொழியால் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் சங்கிகள் வேண்டுமா, என்பதை, 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு எடுப்பார்கள். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அதன்பின் என்ன வேண்டுமானாலும் அவர் பேசட்டும். நாங்கள் கேட்கிறோம். ராஜ்ஜியத்தை ஆளும் முதல்வர், பா.ஜ.,வுக்கு நிச்சயமாக பூஜ்ஜியத்தை வழங்குவார்.இவ்வாறு அவர் கூறினார்.சேகர்பாபுவுக்கு பதிலளித்து தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட, முன்னாள் செய்தி தொடர்பு செயலர், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:ஆந்திரா அல்லது டில்லியில், ஒரு தொகுதி யில் போட்டியிட்டு, சேகர்பாபு வெற்றி பெற்று வந்து எதைச் சொன்னாலும், அதை நாங்கள் கேட்கத் தயாராக இருக்கிறோம்.அதுவரை, தி.மு.க.,வினர் வெற்று சவடால் விடுவதை நிறுத்திக் கொள்ளட்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ramaswamy Jayaraman
ஜூன் 25, 2025 14:32

பவன் கல்யாண் தமிழகத்தில் வெல்ல முடியாது. நீங்கள் வேண்டுமானால் தெலுங்கானாவிலோ அல்லது ஆந்திராவிலோ போய் வென்று விட்டு வாருங்கள். நடக்குமா. கொஞ்சம் யோசித்து பேசவும்.


உதார் மாடல்
ஜூன் 24, 2025 20:08

இந்த உத்தமர் மேலிட அம்மையாருக்காக சிறப்பான சேவை செய்தவர். இங்கே யாரோ ஒருவர் சனாதனத்தை பற்றி உதார் விட்ட உடனே தெலங்கானா, ஆந்திரா வில் என்ன அடி கிடைத்தது அப்படின்னு சிறிது யோசிக்க வேண்டும்.


Balasubramanyan
ஜூன் 24, 2025 13:24

Sir. I have seen many temples or worshiping. Poorly maintained, plants and trees in gopuram, no white wash of the temple walls or decades. But everywhere new silver undies. There are name board about utive officers, and others. But nobody comes to the temple. The cloths or deities are just kept in a corner. No provision o safe custody. Fo lighting the devotees o tributes money and oil. The officers in the dept are new AC cars,jeeps. The commissioner never comes out from his AC room. This dept takes care only few temples. The HRCE staff in leading temples in Chennai are eating the Annadhanam meals which is mainly for devotees. In one temple at Mylapore they allow only 100 people only for Annadhanam maeals. If you are next to the 100 the person you wliinot get the entry. But I have seen the lower staffs arguing big tiff in carriers with meals, plastic bag with Appalachian and other snacks an banana leaves to the HRCE office. No proper toilet facilities in these temples. If you see the condition of the toilets at kapaleeswarar temple you will not enter. Hundreds of devotees are coming to this temple but no proper rest rooms. The Annadhanam temple needs ubayadharars contribution. Can't HRCE spent few hundreds from its treasury for this noble purpose. Who swindled the temples lands and income. Minister says so many acres of land were recovered. But no information about the person who enjoyed the temple properties and what action taken against them. Busy in collecting 50,100,200 rs tickets for seeing and worshiping the deities. By this they make the deities as exhibition materials. What to say. Corruption in all temples.


N Sasikumar Yadhav
ஜூன் 24, 2025 12:23

இந்துமத துரோக திமுக இதுவரை கோயில் சொத்துக்களை ஆட்டய போட்ட நீங்க புதிதாக எத்தனை கோயில்களை கட்டீனீர். ஏதாவது சாக்கு சொல்லி சிறுபான்மையிரினரின் ஓட்டுப்பிச்சைக்காக ஆயிரக்கணக்கான கோயில்களை இடித்ததுதான் இந்துமத துரோக திமுகவின் சாதனை


Rengaraj
ஜூன் 24, 2025 12:21

ஒரு அமைச்சரின் மடத்தனமான பேச்சு ஒரு அறநிலையத்துறை அமைச்சரிடம் இருக்க வேண்டிய பணிவு, தன்னடக்கம், வார்த்தையில் கண்ணியம், கனிவான பேச்சு, கோபம் இல்லாத நடத்தை, தூய எண்ணம் இவை எதுவும் இருப்பதாக தெரியவில்லையே? பதிலுக்கு பதில் பேசாமல் செயலில் அல்லவா தனது திறமையை காட்டவேண்டும். இவர் எப்படி அறத்தை வளர்ப்பார் என்ற சந்தேகம் சாதாரண பக்தர்களுக்கு வராதா ??


Rajah
ஜூன் 24, 2025 10:59

திருட்டு ரயிலில் வந்த தெலுங்கர்கள் தமிழ் நாட்டை ஆளலாம் என்றால் ஏன் பவன் கல்யாண் வெல்ல முடியாது? பவன் கல்யாணுக்கு தமிழை வைத்து எப்படி தமிழர்களை ஏமாற்றுவது என்ற வித்தை தெரியாது.


C.SRIRAM
ஜூன் 24, 2025 09:38

ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் கூட்டணியில்லாமல் சேகர் பாபு சென்னையில் வேறு தொகுதியில் அல்லது ஆந்திராவில் வெல்ல முடியுமா ?. கூமுட்டையின் உளறல்


angbu ganesh
ஜூன் 24, 2025 09:27

நெத்தில குங்குமம் வச்சிட்டு இருக்கற ஹல்லோளுயா கூட்டத்துக்கு துதி பண்டார பாபு.


R.MURALIKRISHNAN
ஜூன் 24, 2025 09:15

தி.மு.க,. வே இந்தியாவுக்கு வேண்டாம் போய்யா .


R.MURALIKRISHNAN
ஜூன் 24, 2025 08:59

வஹ்ப் வாரியமும் நிலங்களை ஆட்டைய போடுது. ஏன் அதையும் அறநிலைய துறையில் இணைக்க வேண்டியதுதானே. ஒருவேளை உம்முடைய ஆட்சி அறமில்லாத துறையோ


rameshkumar natarajan
ஜூன் 24, 2025 10:06

Dravidian parties are ruling tamil Nadu for the past 60+ years. If we compare TN with any other state, TN is in the top three in any developmental parameters. That being the case, why DMK is not reuired? Tamil Nadu is developed during their regime, let these people go and develop UP and Bihar, so their people will not come to tamil Nadu for sellin pani poori.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை