இரு மதத்தவர் நிம்மதியை கெடுக்கலாமா?
இறந்தவர்கள், இரு இடங்களில் பதிவு செய்துள்ளோரை எஸ்.ஐ.ஆரில் நீக்கியதை தவறு என சொல்ல முடியாது. இடம் பெயர்ந்து சென்றோரின், வாக்காளர் பதிவில் விடுபட்டுப் போயிருந்தால், அவர்களை முறையாக கண்டறிந்து சேர்க்க வேண்டும். வழக்கமாக, ஜனவரி, ஜூலை என வருடத்தில் இருமுறை கணக்கெடுப்பு செய்து, இறந்தோரை தேர்தல் கமிஷன் நீக்கும். ஆனால், அதை பல காலமாக செய்யாமல் இருந்துள்ளனர். இதனால் தான் தற்போது இறந்தவர்களும், இரட்டை பதிவு உடையோரும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். முதல்வர் தொகுதியில், அப்படிப்பட்டவர்களைத்தான் தற்போது வாக்காளர் பதிவில் இருந்து நீக்கி உள்ளனர். திருப்பரங்குன்றத்தில் ஹிந்துக்களோ, இஸ்லாமியர்களோ யாரும் பிரச்னையை கிளப்பவில்லை. அங்கே, இரு மதத்தவரும் அண்ணன் - தம்பிகளாகத்தான் வாழ்கின்றனர். ஆனால், அதை வைத்து அரசியல் செய்து, அங்கிருப்போர் நிம்மதியை கெடுக்கின்றனர். - காதர்மொய்தீன், தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்