மேலும் செய்திகள்
பழங்குடியின ஊராட்சி தலைவர்கள் ஆலோசனை
09-Oct-2024
நாகப்பட்டினம் மாவட்டம், பிரதாபராமபுரம் ஊராட்சி தலைவர் சிவராசு, கடலுார் சி.முட்லுார் ஊராட்சி தலைவர் வேதநாயகி, திருச்சி கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் ரம்யா, கோவை கெம்மரம்பாளையம் ஊராட்சி தலைவர் செல்வி நிர்மலா ஆகியோர் கிராம மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக, சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குனரை சந்தித்து பேச, நாள் முழுதும் காத்திருந்துள்ளனர்.அவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், இயக்குனரை சந்திக்க முடியாது எனக் கூறி, நேர்முக உதவியாளரும், அலுவலக உதவியாளரும் விரட்டியுள்ளனர். இயக்குனர் சந்திக்க மறுத்தது குறித்து, விசாரணை நடத்த வேண்டும். அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், மக்களின் நலன் சார்ந்து முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.- அன்புமணி, பா.ம.க., தலைவர்
09-Oct-2024