உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயிற்சி டாக்டர்கள் அறையில் கஞ்சா: 3 பேர் கைது

பயிற்சி டாக்டர்கள் அறையில் கஞ்சா: 3 பேர் கைது

சென்னை: சென்னை, சென்ட்ரல் பகுதியில் உள்ள, பயிற்சி மருத்துவ மாணவர் விடுதியில், இக்கும்பல் போதைப் பொருள் விற்றது தெரியவந்ததும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் தேரணிராஜன், நேற்று முன்தினம், விடுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது, பயிற்சி டாக்டர்கள் தருண், 23, ஜெயந்த், 23, சஞ்சய் ரத்தினவேல், 23, ஆகியோர் தங்கி இருந்த அறையில், 149 கிராம் கஞ்சா மற்றும் வலி நிவாரணத்திற்காக மருத்துவ துறையில் பயன்படுத்தும் நான்கு கேட்டமைன் மருத்துவ குப்பிகள் இருப்பதை கண்டறிந்தார். இது தொடர்பாக, போலீசில் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து, பயிற்சி டாக்டர்கள் மூவரையும், போலீசார் கைது செய்தனர்; ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த கும்பல் குறித்து துப்பு துலக்க, கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.இப்படையினர், சைதாப்பேட்டை சின்னமலையைச் சேர்ந்த ரோட்னி ரோட்ரிகோ, 26, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mecca Shivan
மார் 12, 2025 18:23

சென்னையில் பல இடங்களில் இரவு இரண்டுமணிக்கு மேல் உயர் ரக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து போதை பொருள் விற்பதாக மக்கள் கூறுகின்றனர்... இரவு நேர போலீஸ் ரோந்தை இரண்டு குழுவாக பிரித்து இரவு ஒரு மணி ஒரு குழுவும் பிறகு இரண்டாவது குழு இரவு ஒரு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை ரோந்து சென்றால் போலீசுக்கும் சிரமம் இருக்காது ..இது போல வியாபாரமும் நடக்காது


JAGADEESANRAJAMANI
மார் 12, 2025 14:38

முதலில் பள்ளி, கல்லூரி வாசலில் இருக்கும் கடைகளை போலீசார் பரிசோதிக்க வேண்டும். தமிழகத்தில் தினசரி தங்கம், பெட்ரோல் விலையேறுதைப்போல பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.


Ganapathy
மார் 12, 2025 12:23

இரும்புக்கை இழுப்புவாத கையாக மாறிவிட்டது. போதை மருந்தை கடத்தும் கும்பலுடன் மொத்த கோபாலபுர குடும்பமும் தொடர்பில் உள்ளது. போதை கடத்தல்காரனிடம் காசு வாங்குபவன் ஆனா அவனப்பன் மட்டும் துண்டு சீட்ல எழுதிவச்சு டயலாக் பேசி மக்களை முட்டாளாக்குவான்


Ramesh Sargam
மார் 12, 2025 11:50

தமிழகத்தில், அதுவும் நான் வசிக்கும் சென்னையில் போதைப் பொருட்கள் நடமாட்டமே... இருக்கவே இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் ஒரு பொய் பேசுவார். இது எதிர்கட்சியினரின் சதி , என்றும் கூறுவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை