உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் 4 கிலோ தங்கம் மோசடி நகைக்கடைக்காரர் மீது வழக்கு

கோவையில் 4 கிலோ தங்கம் மோசடி நகைக்கடைக்காரர் மீது வழக்கு

கோவை:கோவை, கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் சிவக்குமார், 51. அதே பகுதியில் வீனஸ் ஜூவல்லரி என்ற பெயரில், தங்க நகை தொழில் செய்து வருகிறார். இதேபோல், கோவை ராமநாதபுரம், சுங்கம் பகுதியை சேர்ந்தவர் பாலன், 71. நகை கடை வைத்து நடத்தி வந்தார்.சிவக்குமாரிடம் இருந்து தங்கத்தை வாங்கி, அதை நகைகளாக செய்து கடந்த 15 ஆண்டுகளாக பாலன் விற்பனை செய்து வந்தார். சிவக்குமாரிடம் இருந்து பெறும் நகைகளுக்கு சரியான நேரத்தில் பணத்தையும் கொடுத்து வந்தார்.மேலும் சிறிது, சிறிதாக சுமார், 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான 4.192 கிலோ கிராம் தங்கத்தை பாலன் பெற்றுள்ளார்.அதற்கான பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.சிவக்குமார் பல முறை கேட்டும், பாலன் பணம் கொடுக்கவில்லை. சிவக்குமார் பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் பாலன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை