உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எண்ணுாரில் 9 தொழிலாளர்கள் இறந்த சம்பவம்: ஒப்பந்த நிறுவன உரிமையாளர் மீது வழக்கு

எண்ணுாரில் 9 தொழிலாளர்கள் இறந்த சம்பவம்: ஒப்பந்த நிறுவன உரிமையாளர் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மீஞ்சூர்: சென்னை எண்ணுார் அனல்மின் நிலைய கட் டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநில தொழிலாளர்கள் ஒன்பது பேர் பலியான சம்பவத்தில், பணியின் போது அவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், பணிபுரிந்ததே காரணம் என, பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கட்டுமான பணி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த வாயலுாரில், எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில், மின் உற்பத்திக்காக அனல்மின் நிலைய கட்டுமான பணிகளில், 'பெல்' எனப்படும் பி.எச்.இ.எல்., நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. இதில், கர்நாடக மாநி லம் பெங்களூரைச் சேர்ந்த, 'மெட்டல் கோர்மா' என்ற ஒப்பந்த நிறுவனம், நிலக்கரி சேகரித்து வைப்பதற்கும், கையாளுவதற்கும் இரண்டு கிடங்குகள் அமைக்கும் கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது. இங்கு நேற்று முன்தினம் இரும்பு தளவாடங்கள் பொருத்தும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இரும்பு தளவாடத்தின் ஒரு பகுதியில் உள்ள கம்பிகள் திடீரென சரிந்தன. இதில், பணி செய்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, மங்கோல் கல்யாண்டியா, 34, என்பவர் பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜாக்கிரதை இந்த விபத்து தொடர்பாக, அனல்மின் திட்ட கட்டுமான பொறியாளர் ராஜலட்சுமி அளித்த புகாரையடுத்து, காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் பணிபுரிந்தது தெரிந்தது. மெட்டல் கோர்மா ஒப்பந்த நிறுவனத்தின் அஜாக்கிரதை காரணமாகவே இந்த விபத்து நடந்ததாக தெரியவந்தது. இதையடுத்து மெட்டல் கோர்மா நிறுவன உரிமையாளர், மேற்பார்வையாளர்கள் மூவர் என, நான்கு பேர் மீது, அலட்சியத்தால் ஏற்படும் மரணம், மற்றவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துதல் என, இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் தடய அறிவியல் துறை நிபுணர்கள் அங்கு முகாமிட்டு, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பு மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்டு டி., கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளி ஒருவர், அவர் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் கடந்த மாதம் 2ம் தேதி இரவு, தவறி விழுந்து இறந்தார். இந்த சம்பவத்தால் நுாற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், தற்போது வடமாநில தொழிலாளர்கள் ஒன்பது பேர், பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இறந்து உள்ளனர். இந்த சம்பவத்தால் வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், அத்திப்பட்டு புதுநகர், வயலுார், காட்டுப்பள்ளி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

கணேசன்
அக் 02, 2025 12:02

இறந்தவர்களுடைய ஆத்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும்.


திகழ் ஓவியன், Ajax Ontario
அக் 02, 2025 08:17

மாடல் அப்டினாலே .....


பேசும் தமிழன்
அக் 02, 2025 07:20

இங்கே 9 உயிர் போய் இருக்கிறது.... இவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா .... மாடல் இதற்கு என்ன சொல்ல போகிறது ?


Field Marshal
அக் 02, 2025 07:00

ஒப்பந்தக்காரர்கள் மீது பழிபோட்டு தப்பமுடியாது Safety officer மின் நிலையத்தின் சார்பில் நியமிக்கப்படுவார் Supervision குறைபாடுகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லை ..சாராயம் குடித்து உயிரிழந்திருந்தாலோ .. நடிகர்களை பார்க்க சென்று கும்பலில் சிக்கியிருந்து செத்தா பத்து லட்சம் ..வேலை செய்து செய்தவர்களுக்கு என்ன கிடைக்கும்


visu
அக் 02, 2025 07:55

அந்த அமைப்பை பாருங்க இது வழக்கமா நடக்கும் வேலைதான் ஆனால் safety பெல்ட் அணிந்திருக்க வேண்டும் அதனால் உயிர் பலி


V K
அக் 02, 2025 06:16

துணை முதல்வர் துபாய் பயணம்


Chitra Rengarajan
அக் 02, 2025 06:14

காண்ட்ராக்ட் கொடுத்த வங்க பாதுகாப்பா வேலை செய்யராங்களா என்று பார்க்கும் பொருப்பு உண்டு. முதல் குற்றவாளி காண்ட்ராக்ட் கொடுத்த வங்க. அப்பரம் காண்ட்ராக்டர். வேலை கொடுத்துட்டு மறக்க முடியாது.


Kasimani Baskaran
அக் 02, 2025 04:01

சாராயம் காய்ச்சினால் கூட வழக்கு வராது - ஆனால் கட்டுமானம் செய்கிற நிறுவனம் என்றவுடன் வழக்கு. பாதுகாப்பு உபகரணம் என்றும் அடிப்படை காரணமாக இருக்க முடியாது - ஆனால் தரமற்ற வேலை என்பது அப்படியல்ல. ஸ்கபோல்ட்டிங் என்பது அடிப்படையில் நவீன சாரம். அதை பத்திரமாக நிர்மாணிக்க முழு அளவிலான பயிற்சி பெற்றவர்களை வைத்துத்தான் செய்ய முடியும். பயிற்சி பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களை மேற்பார்வை செய்ய ஒரு மேஸ்திரி இருப்பார். அவர் குத்தகை கொடுத்த நிறுவனத்துக்கு போதுமான பாதுகாப்பு இருக்கிறது என்று பல பெர்மிட்டுகளை காட்டி, தொழில்துறை பாதுகாப்பு நிறுவனம் சான்றிதழ் கொடுத்த பின்னர்தான் வேலை நடக்கும் - அதாவது மொத்தமாக அந்த குழுவே வேலை செய்யவில்லை போல தெரிகிறது. அத்தனை பேரையும் குற்றம் சாட்டவேண்டும்.


Srinivasan Narasimhan
அக் 02, 2025 03:38

எங்கே நாடகம் செய்யும் கூட்டம் காணோம் இறந்தவர்கள் தமிழ் நாட்டின் வாக்காளர்கள் இல்லை அரிசியல் செயீய வாய்பாபில்ல


Ganesh S
அக் 02, 2025 03:35

கரூர் நெரிசல் விபத்தில் ஏன் கட்சி உரிமையாளர் மேல் வழக்கு பதியவில்லை?


Field Marshal
அக் 02, 2025 06:54

பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை .


Ramesh Sargam
அக் 02, 2025 03:21

தமிழகத்தில் பரிதாப மரணங்கள் அதிகரித்துவிட்டன. வேதனை அளிக்கிறது. அதில் அதிக மரணங்கள் அஜாக்கிரதையால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை