உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடிக்கு நல்லபுத்தி வேண்டி தேங்காய் உடைத்தவர்கள் மீது வழக்கு

பொன்முடிக்கு நல்லபுத்தி வேண்டி தேங்காய் உடைத்தவர்கள் மீது வழக்கு

மயிலாடுதுறை:அமைச்சர் பொன்முடிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டி, தேங்காய் உடைத்து வழிபாடு நடத்திய, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் பொன்முடி, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சைவ, வைணவத்தின் சின்னங்களான திருநீறு மற்றும் திருமண் குறித்து அவதுாறாக பேசினார். இதைக் கண்டிக்கும் வகையில், நேற்று முன்தினம் மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் இரட்டைப் பிள்ளையார் கோவிலில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், அமைச்சர் பொன்முடிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டி, 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.இந்நிலையில், சட்டவிரோதமாக கூடி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் தேங்காய் உடைத்ததாக, விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் மீது வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை