உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈ.வெ.ரா., குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

ஈ.வெ.ரா., குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஈ.வெ.ரா., குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க கோரி, சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், கடலுார் மாவட்டம் வடலுாரில் கடந்த ஜனவரி மாதம், ஈ.வெ.ரா., குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதுதொடர்பாக, சீமானுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின்படி, கடலுார், கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில், 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இந்த வழக்குகளை எல்லாம் ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சீமான் வழக்கு தொடர்ந்தார்.இம்மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன; அது குறித்த எப்.ஐ.ஆர்., எங்கே?' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன' என்றார்.இதையடுத்து, 'எந்த விபரங்களும் இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், இதன் மீது எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?' என கேட்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கொங்கு தமிழன் பிரசாந்த்
மார் 19, 2025 17:01

செபாஸ்டின் சைமன் தப்பிக்க வழியே இல்லை. வாய்ப்பில்லை ராஜா ஹே ஹே ஹே...


Karuthu kirukkan
மார் 19, 2025 10:57

ஐயோ ஐயோ நீதிபதி எண்ட்ரன்ஸ் எக்ஸாமில் question அவுட் ஆகி பாஸ் பண்ணிருப்பாரோ அல்லது ஆளும் கட்சியின் கைக்கூலியா ? பணம் கொடுத்து பதவியா , ரகுவுக்கு சொந்தமோ ? வரலாற்றிலே முதன்முறையாக பொது இடத்தில பொது .மக்கள் நலனை பற்றி பேசுவதற்கு பொதுக்கூட்டம் போ, 25ஆயிரம் பணம் கட்டவேண்டுமாம் , நீதியரசர் ஐயா N ஆனந்த் வெங்கடேஷ் , GR சுவாமிநாதன் போன்றோர்கள் மத்தியில் இப்படியும் ...என்னத்த சொல்ல ....


Mecca Shivan
மார் 19, 2025 10:49

எப் ஐ யார் முடக்கப்பட்டிருக்கிறது என்றால் நீதிமன்றம் காவல் துறைக்கு முறையான உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்


Nallavan
மார் 19, 2025 07:52

இவனுக்கும் காத்திருக்கிறது ....


Appa V
மார் 19, 2025 07:22

ஒத்திவைத்திருக்கலாமே ..


சமீபத்திய செய்தி