உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ' சாலையில் நடந்து சென்றாலே தடியடி... சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால், மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாக கூடி அதிகாரத்துக்கு எதிரான புரட்சியை உருவாக்கி காட்டினார்களோ அதேபோல் இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். இவ்வாறு அந்த பதிவில் கூறியிருந்தார்.இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக எம்பி கனிமொழி, ' இந்தக் கருத்து பொறுப்பற்றது. வன்முறையை தூண்டும் வகையில் இந்தக் கருத்து அமைந்துள்ளதாக' தெரிவித்து இருந்தார். பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்தப்பதிவை ஆதவ் அர்ஜூனா நீக்கிவிட்டார்.இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.192 கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பாடு196(1) வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை வளர்க்கும் அல்லது நல்லிணக்கத்தை பாதிக்கும் செயல்கள்197 (1) (D) இந்திய இறையாண்மை, ஒற்றுமை அல்லது பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்தல்,353(1)(b) பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகள் தவறான தகவல்கள் அல்லது வதந்திகளை வெளியிடுவது353(2) பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் தகவலை வெளியிடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ramesh
செப் 30, 2025 22:26

ஆதவ் அர்ஜுனா, உங்கள் கட்சி ரசிகர் கூட்டத்தை விட தமிழ் நாட்டு மக்கள் தொகை மிக பெரியது புரட்சியை தூண்டும் உங்கள் மீது பொது மக்கள் புரட்சி நடத்தினால் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்ற நிலை ஏற்படும் .முதலில் உங்கள் ரசிகர் படையை புரட்சி செய்ய தூண்டும் உங்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


ramesh
செப் 30, 2025 22:13

இப்படி பொறுப்பற்ற முறையில் இனைய தளத்தில் பதிவிடும் ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் தலைவர்கள் ஆகா இருந்தால் கட்சி அதோ கதிதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை