உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து வாங்கி குவித்த மத்திய அரசு அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு

சொத்து வாங்கி குவித்த மத்திய அரசு அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு

சென்னை:வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, மத்திய அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவி மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், 2021 முதல், புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில், மத்திய பெட்ரோலிய துறையின் கீழ் செயல்படும், இந்தியன் ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் நிறுவனத்தில், முதன்மை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி விமலா. திருவாரூர் மாவட்டத்தில், வட்டார கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. விசாரணையில், ரவிச்சந்திரன் மற்றும் விமலா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக, 1.12 கோடி ரூபாய்க்கு, அதாவது, 78.17 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக இருவர் மீதும், சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ