ரூ.200 கோடி ஊழல் சி.பி.ஐ., விசாரணை தேவை
மதுரை மாநகராட்சியில் சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்ததில், 200 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதில், தி.மு.க.,வைச் சேர்ந்த மண்டல குழு தலைவர்களும், நிலைக்குழு தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். மேயரின் தனி உதவியாளரும் மாற்றப்பட்டுள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக தமிழக அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லையே ஏன்?மதுரை மாநகராட்சி 200 கோடி ரூபாய் ஊழலை, தி.மு.க., அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை விசாரித்தால், குற்றவாளிகள் தப்பி விடுவர். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். மதுரை மாநகராட்சியை கலைக்க வேண்டும்.- அன்புமணிதலைவர், பா.ம.க.,