உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர்கள் 50 மணி நேரம் பயிற்சி பெறுவது அவசியம் சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

ஆசிரியர்கள் 50 மணி நேரம் பயிற்சி பெறுவது அவசியம் சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., புதிய கல்விக் கொள்கையை பின்பற்றி, ஆசிரியர்கள் ஆண்டுதோறும் 50 மணி நேரம், சி.பி.டி., எனும் தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட, அரசு பயிற்சி நிறுவனங்களில், நேரடி பயிற்சியில், 30 மணி நேரம், 'ஆன்லைன்' பயிற்சியில், 20 மணி நேரம் பங்கேற்க வேண்டும். அதற்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சியில், 12 மணி நேரம் நெறிமுறைகளுக்கான பயிற்சி; 24 மணி நேரம் அறிவுக்கூர்மைக்கான பயிற்சி; 14 மணி நேரம், தொழில்முறை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கான நெறிமுறைகளை, என்.சி.இ.ஆர்.டி., வகுத்துள்ளது. அதன்படி, பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், மாநாடுகள், ஆன்லைன் படிப்புகளாக வகுக்கப்பட்டுள்ளன. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்டவை, இந்த ஆண்டு பயிற்சிக்கான கருப்பொருள்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மின் சான்றுகளாக, என்.பி.எஸ்.டி., எனும், ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தரநிலை இணையதளத்துடன் இணைக்கப்படும் என, வழிகாட்டு நெறி முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை