உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனுஷி படம் மறு ஆய்வு செய்யப்படும் ஐகோர்ட்டில் சென்சார் போர்டு தகவல்

மனுஷி படம் மறு ஆய்வு செய்யப்படும் ஐகோர்ட்டில் சென்சார் போர்டு தகவல்

சென்னை: நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள, 'மனுஷி' படத்தை, மீண்டும் பார்வையிட்டு மறு ஆய்வு செய்ய உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'சென்சார் போர்டு' எனப்படும், மத்திய தணிக்கை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள படம், மனுஷி. இயக்குனர் வெற்றி மாறனின் நிறுவனம் தயாரித்துள்ளது; கோபி நயினார் இயக்கியுள்ளார்; இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில், பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மாநில அரசை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், கம்யூனிஸ கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி, 2024, செப்டம்பரில் படத்துக்கு, தணிக்கை சான்று வழங்க, தணிக்கை வாரியம் மறுத்தது.இதை எதிர்த்தும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் தணிக்கை செய்ய கோரியும், தயாரிப்பாளர் வெற்றி மாறன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய தணிக்கை வாரியம் தரப்பில், வழக்கறிஞர் குமரகுரு ஆஜராகி, ''மனுஷி படத்தை மீண்டும் பார்வையிட்டு, மறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதை ஏற்று, மனுதாரர் அந்த காட்சிகளை நீக்கினால், படத்துக்கு என்ன சான்று வழங்கப்படும் என்பதை, மறு ஆய்வு குழு தெரிவிக்கும். காட்சிகளை நீக்க மறுத்தால், அந்த விபரங்கள் வாரிய முடிவுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.இதையடுத்து, 'மறு ஆய்வு குழு படத்தை பார்வையிட்டு, அதன் முடிவுகளை மனுதாரருக்கு தெரிவித்த பின், வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம்' என தெரிவித்த நீதிபதி, வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
ஜூன் 12, 2025 12:55

நக்சல் கொள்கைகளை மறைமுகமாக நுழைக்க முயன்றால் விடக்கூடாது. கம்யூனிஸ்டு படங்களை சற்று ஜாக்கிரதையாக சென்சார் செய்ய வேண்டும். காவல்துறை மீதான நம்பிக்கையை குலைக்கும் கதைகள் தேவையில்லை.


கண்ணன்
ஜூன் 12, 2025 11:29

கம்யூக்களும் அவர்களது ”கொள்கை” களும் எப்போதுமே குழப்பமானவைகளே!


சமீபத்திய செய்தி