சென்னை - சந்திரகாச்சி சிறப்பு ரயில்
சென்னை:சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்ட்ரலில் இருந்து, நாளை காலை 8:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:30 மணிக்கு சந்திரகாச்சி செல்லும் . சந்திரகாச்சியில் இருந்து, வரும் 18ம் தேதி மாலை 5:55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8:30 மணிக்கு சென்ட்ரல் வரும். டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது .