உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபரணத்தங்கம் வாங்குவோர் கவனிக்க! 2வது நாளாக இன்றும் விலை சரிவு

ஆபரணத்தங்கம் வாங்குவோர் கவனிக்க! 2வது நாளாக இன்றும் விலை சரிவு

சென்னை; சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. நேற்று (ஜன.27) தங்கம் விலையில் சற்று சரிவு காணப்பட்டது. கிராமுக்கு ரூ.15 குறைந்து 7,540 ஆக இருந்தது. சவரன் 120 ரூபாய் குறைந்து ரூ.60,320க்கு விற்கப்பட்டது.அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (ஜன.28) சற்று மாற்றம் காணப்படுகிறது. ஒரு சவரன் ரூ.240 குறைந்துள்ளது. ஒரு கிராம் 30 ரூபாய் குறைந்து 7,510 ஆக இருக்கிறது. சவரன் ரூ. 60,080க்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் (ஜன.18 - ஜன.27) தங்கம் விலை நிலவரம் வருமாறு; 18/01/2025 - ரூ.59,480 19/01/2025 - ரூ.59,48020/01/2025 - ரூ.59,60021/01/2025 - ரூ.59,600 22/01/2025 - ரூ. 60,200 23/01/2025 - ரூ.60,20024/01/2025 - ரூ.60,440 25/01/2025 - ரூ. 60,440 26/01/2025 - ரூ.60,440 27/01/2025 - ரூ.60,320


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி