உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அத்தனையும் பொய்யா கோபால்! திருவொற்றியூர் பள்ளி வாயுக்கசிவில் திடீர் டுவிஸ்ட்!

அத்தனையும் பொய்யா கோபால்! திருவொற்றியூர் பள்ளி வாயுக்கசிவில் திடீர் டுவிஸ்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காகவே வாயுக்கசிவு ஏற்பட்டதாக திருவொற்றியூர் விக்டரி பள்ளி மாணவர்கள் நாடகம் ஆடியிருக்கலாம் என்று போலீசார் புதிய தகவல்களை வெளியிட்டு உள்ளனர். திருவொற்றியூரில் உள்ள விக்டரி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. 2 முறை நிகழ்ந்த இந்த சம்பவத்தின் எதிரொலியாக 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து இதே சம்பவங்கள் அரங்கேற பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். பலகட்ட சோதனைகளுக்கு பின்னர் பள்ளியில் வாயுக்கசிவு ஏற்பட சாத்தியமில்லை என்று அறிவித்தனர். இந் நிலையில் பள்ளியிலும் மாணவர்கள் மத்தியிலும் நடத்தப்பட்ட விசாரணை பற்றிய தகவல்கள் போலீசார் கூறி உள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ளதாவது; அக்டோபர் 25ம் தேதி முதலில் 45 மாணவர்கள் உடல்நிலை பாதிப்படைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விக்டரி பள்ளியில் வேதியியல் ஆய்வகத்தில் இருந்து வாயு கசிந்ததால் அவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் நவம்பர் 4ம் தேதி மேலும் 10 மாணவர்கள் மயக்கம், வாந்தி வருவதாக கூறவே அவர்களும் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். மாணவர்களின் நிலையைக் கண்டு பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்து போராட்டத்திலும் குதித்தனர். நடந்த சம்பவத்தை அறிந்து, நாங்களும் விசாரணையை துவக்கினோம். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உரிய கள ஆய்வை நடத்தி உள்ளது. பள்ளியிலும், சரி அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள ஆலைகளில் இருந்து எங்கும் வாயுக்கசிவு ஏற்பட வில்லை என்பது தெரிய வந்தது.எங்களின் சந்தேகம் எல்லாம் மாணவர்கள் மீது திரும்பி இருக்கிறது. பள்ளி பாட வேளைகளை புறக்கணிக்க மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து இதுபோன்று நாடகம் ஆடி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறி உள்ளனர்.அனைத்து பிரச்னைகளும் முடிந்துவிட்ட நிலையில், இன்று விக்டரி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 2 வாரங்கள் கழித்து மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு திரும்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

aaruthirumalai
நவ 13, 2024 19:20

அப்படியே உட்டுருந்தா அதுவே சரியாயிருக்கும். இப்ப எங்க அப்பன் குதுருக்குள்ள இல்ல....


Suppan
நவ 13, 2024 17:02

இந்த மஹா உருட்டு அந்த விக்டரி பள்ளியை காப்பாற்றி ஒட்டுப்பிச்சை போடுபவர்களைத் தாஜா செய்யவும் எடுக்கப்பட்ட முயற்சி என்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. அடுத்த சம்பவம் நிகழ்ந்தால் இதை ஒட்டு மொத்தமாக ஊத்தி மூடிவிடலாம் .


Ms Mahadevan Mahadevan
நவ 13, 2024 15:09

ஒண்ணுமே புரியலே பள்ளிக்கூடத்தில் என்னமோ நடக்குது மர்மம்மா இருக்குது. டாக்டரை கேட்கவா தலைமை ஆசிரியரை கேட்கவா காவல் துறையை நம்பவா? ஹே ராம்.


இசக்கிமுத்து,தூத்துக்குடி
நவ 13, 2024 15:51

நடிகர் விவேக் சொன்ன மாதிரி, அடேய் நீங்க வேற எதை சொல்லியிருந்தாலும் மன்னிச்சுருவோம்டா ஆனா வாயில்லா ஜீவன் அந்த முயல் உச்சா போனதால இந்த பச்சாக்கள் மயக்கம் போட்டுச்சுன்னு வுட்டீங்களேடா ஒரு டூப்பு அதை மட்டும் எங்களால மன்னிக்கவே முடியாதுடா?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 13, 2024 14:23

போதைப்பொருள் மது இது ஏதாவது மாணவர்கள் உபயோகப் படுத்தி இருப்பார்களோ. அதை மறைக்க ஏதாவது நாடகம் நடக்கிறதோ? ஒன்னுமே புரியலை உலகத்திலே தமிழ் பாடப் புத்தகத்தில் சினிமா கூத்தாடிகளை வைத்து பாடம் நடத்துகிறார்கள். பின்னர் பள்ளிகளில் வேறென்ன நடக்கும். மக்களும் ஆயிரம் ரூபாய் இலவசங்கள் ஆசை பட்டு திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து கணவர்களை குடிக்கு அடிமையாக்கி சில சமயங்களில் தானும் குடிக்கு பின்னர் போய் இப்போது குழந்தைகளில் கல்வியில் சினிமா கூத்தாடிகளை கொண்டு வந்து அவர்கள் மனதை சீரழித்து கொண்டு உள்ளார்கள். தமிழ் பாட புத்தகத்தில் சினிமா கூத்தாடிகளை படித்தால் தமிழ் வளருமா? எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறவும்.


sankar
நவ 13, 2024 14:12

"பள்ளி பாட வேளைகளை புறக்கணிக்க மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து இதுபோன்று நாடகம் ஆடி இருக்கலாம்"- சிறப்பான கதைவசனம் சார் - யார் வைரம் எழுதியதா


Sivagiri
நவ 13, 2024 13:44

மாணவர்கள் பொய் சொல்றாங்களா, இல்ல கவர்ன்மெண்ட் பொய் சொல்லுதா, இல்ல ஸ்கூல் பொய் சொல்லுதா? அதான் திருட்டு மாடல்-னு புரிஞ்சிக்கணும், அரசன் எவ்வழியோ, அவ்வழியே மக்கள் - - ? . .


வைகுண்டேஸ்வரன்
நவ 13, 2024 13:19

இந்த பள்ளிக்கு அருகில் கெமிக்கல் பேக்டரி எதுவும் இல்லை. பள்ளியிலும் எந்த கேஸ் பிளான்ட்டும் இல்லை. இங்கே திராவிட ஆட்சி, விடியல் என்று கூவுகிறவர்கள், நீங்க என்ன செய்திருப்பீர்கள்? சொல்லுங்க


ஆராவமுதன்,சின்னசேலம்
நவ 13, 2024 19:23

உன்னை மாதிரி இந்த ஆட்சிக்கு எதுக்கெடுத்தாலும் முட்டுக் கொடுக்க மாட்டோம்.


வைகுண்டேஸ்வரன்
நவ 13, 2024 13:16

இந்த பள்ளிக்கூடம் நடந்தாலும், இழுத்து மூடினாலும், திமுக விற்கு அல்லது திராவிட ஆட்சிக்கு எந்த பாதிப்போ லாபமோ இல்லை. அப்புறம் அவர்கள் எதுக்கு ஏதாவது செய்திருக்கப் போகிறார்கள்.


Ganapathy Subramanian
நவ 13, 2024 13:11

அப்படியென்றால் மருத்துவர்கள் இந்த மாணவர்களுக்கு என்ன சிகிச்சை அளித்தனர்? அதை யாரும் விசாரிக்க மாட்டார்களா? செந்தில் பாலாஜிக்கு நடந்த மாதிரி இதுவும் ஒரு உருட்டுதானா? மனிதருக்கு ஜாமீன் கிடைத்தவுடன் உடனே பதவியேற்பு, நெஞ்சு வலி போயே போச்சு, மனிதன் பயங்கர சுறுசுறுப்பாக வேறு இருக்கிறார்?


sankar
நவ 13, 2024 12:48

நாலு பேட்டி கொடுத்தால் - உண்மை நாணல் போல வளையும் ?


புதிய வீடியோ