உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை டூ மதுரை இரவு நேர விமான சேவை துவக்கம்

சென்னை டூ மதுரை இரவு நேர விமான சேவை துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் டிச., 20 முதல் சென்னை - மதுரை - சென்னை இரவு நேர விமான சேவை துவங்குகிறது. இவ்விமான நிலையத்திற்கு அக்., 1 முதல் 24 மணி நேரமும் விமானங்கள் வந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் இரவு நேர சேவையை எந்த விமான நிறுவனமும் பயன்படுத்தவில்லை.இந்நிலையில் டிச., 20 முதல் இண்டிகோ விமான நிறுவனம் இரவு நேர சேவையை துவக்குகிறது. அன்று சென்னையில் இருந்து இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:25 மணிக்கு மதுரை வந்தடையும். அதே விமானம் இரவு 10:45 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை சென்றடையும். இதன் வாயிலாக சென்னை - மதுரை - சென்னை 10 விமான சேவைகளில் 9 சேவையை இண்டிகோ வழங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Gajageswari
டிச 12, 2024 17:32

நல்ல முடிவு


Bhaskaran
டிச 08, 2024 17:14

அப்படியே கூட்டம் பிச்சு கிட்டு போய்ட்டாலும்


Ramesh RK
டிச 08, 2024 13:15

மதுரை டு சென்னை டு மதுரை விமானக்கடம் உலகத்தில் வைத்து மிக அதிகம் இண்டிகோ மட்டும் செயல்படுவதால் மற்ற விமான சேவை இல்லாததால் கட்டன கொள்ளை அடிக்கிறார்கள் 14000 18000 விலை


ram
டிச 08, 2024 10:58

எதுக்கு கையில் கிடைப்பதையெல்லாம் சுருட்டிட்டு போறதுக்கா..


தமிழ்வேள்
டிச 08, 2024 10:41

தென் தமிழகத்தை தனி மாநிலமாக பிரித்து மதுரை நகரை தலைநகராக ஆக்கும் சிறந்த திட்டம்...தென் மாவட்டங்கள் தனி மாநிலமாக பிரிக்கா விட்டால் வளர்ச்சி அடையாது..அதே நேரத்தில் சென்னையின் அழிவையும் தவிர்க்க இயலாது.. சென்னை தனி யூனியன் பிரதேசம் ஆக வேண்டும்


பாமரன்
டிச 08, 2024 09:31

மதுரை பழைய விமான நிலையங்களில் ஒன்றாகும்... இதுவரை இரவு லேண்டிங் இல்லாத நிலை அவலமானதுதான்.. இப்போ மளமளன்னு வேலை நடப்பதை பார்த்தால் அலங்காரம் செஞ்ச பிறகு டொணேட் பண்ணும் முயற்சி மாதிரி இருக்கு... வேற யாருக்கு... நம்ம ஸ்பாண்ஸர்க்கு தான்... பார்ப்போம்...


Hajamohaideen T
டிச 08, 2024 07:03

A good arrangement is made by Indigo.. Thanks


கிஜன்
டிச 08, 2024 06:19

சூப்பர் .... இரவு நேரங்களில் துபாய் ...மற்றும் சிங்கப்பூர் விமானங்களை இயக்கவேண்டும் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை