உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திம்புவில் சிதம்பரம், மாலிக் சந்திப்பு

திம்புவில் சிதம்பரம், மாலிக் சந்திப்பு

திம்பு: பூடான் தலைநகர் திம்புவில் நடக்கும் சார்‌க் உச்சி மாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்ற மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அங்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கை சந்தித்து பேசினார். பயங்கரவாதம் தெற்குஆசியாவிற்கு அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகுந்த சவாலாக இருக்கிறது என சிதம்பரம் கூறினார். இது குறித்து பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், இருதரப்பு குறித்து பேசியது திருப்திகரமாக இருந்தது. உள்ளன்புடன் கூடிய நல்ல சூழ்நிலை நிலவியதாகவும், சிதம்பரம் எனது மூத்த சகோதரர் எனவும் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி