மேலும் செய்திகள்
இன்னும் 2 மாதங்களில் சென்னையில் ஏர் டாக்ஸி சோதனை
2 hour(s) ago | 1
இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா!
5 hour(s) ago | 16
புதுடில்லி: இந்தியாவில் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதை உலகம் அங்கீகரிக்கிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.சர்வதேச ஐடியா (International IDEA) என்பது உலகளவில் ஜனநாயக செயல்முறைகளை ஆதரிக்கும் ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். டிச.,3ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் 2026ம் ஆண்டின் சர்வதேச ஐடியாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார்.சர்வதேச ஐடியாவுக்கு தலைமை பொறுப்பை ஏற்பது ஒவ்வொரு இந்தியர்களுக்கும் பெருமையான விஷயம் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது; இந்தியாவில் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதை உலகம் அங்கீகரிக்கிறது. எனவே, 30 ஆண்டுகளின் வரலாற்றில் முதல் முறையாக, உலகின் 37 நாடுகளின் குழு, இந்தியாவை இன்டர்நேஷனல் ஐடியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்க அழைத்துள்ளது. இது இந்திய மக்கள் மற்றும் அனைத்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் மிகப்பெரிய கவுரவமாகும், இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 1
5 hour(s) ago | 16