உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதவி பொறியாளர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கினார் முதல்வர்

உதவி பொறியாளர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கினார் முதல்வர்

சென்னை:பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் வேளாண்மை துறைகளுக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டோருக்கு, பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். l தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, 60 வேளாண் அலுவலர்கள், 109 உதவி வேளாண் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வேளாண் துறையில் பணிபுரிந்து உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள், 33 பேர் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், தட்டச்சர், காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மொத்தமாக, 202 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன l பொதுப்பணித் துறைக்கு, 98 கட்டுமான உதவி பொறியாளர்கள், 67 மின் உதவி பொறியாளர்கள் என மொத்தம், 165 பேரும், நெடுஞ்சாலை துறையில், உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு, 45 பேரும் தேர்வு செய்யப்பட்டு உள்ள னர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பன்னீர்செல்வம், தலைமை செயலர் முருகானந்தம், வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி, பொதுப்பணித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஆக 20, 2025 04:31

தேர்தல் வருது, தேர்தல் வருது. நாலரை வருடமாக ஷூட்டிங் நடத்தியத்தைத் தவிர வேறு ஒன்றுமே நடக்கவில்லை. தேர்தல் வந்தவுடன் இந்த நாடகம்.


புதிய வீடியோ