உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்வேறு பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்

பல்வேறு பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்

அறநிலையத்துறை

கிராமப்புறங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள, 1,250 கோவில்களில் பூஜை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள தலா, 2.50 லட்சம் ரூபாய் என, 62.5 கோடி ரூபாய்க்கான வரைவோலை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் ஒப்படைப்பு.

மீன்வளத்துறை

கடலோர மாவட்டங்களில், மீன்வளத்துறை சார்பில், 58.5 கோடி ரூபாயில், மீன்பிடி இறங்குதளங்கள், மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள், மீன்குஞ்சு பொறிப்பகம் ஆகியவற்றின் திறப்பும்; நெல்லை, கூடுதாழையில், 15 கோடி ரூபாயில், துாண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளத்திற்கு அடிக்கல் நாட்டலும்.

வருவாய் துறை

மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தில், 9.54 கோடி ரூபாயில், 2 தாலுகா அலுவலகங்கள்; 25 இடங்களில், 16.5கோடி ரூபாயில், 25 ஆர்.ஐ., அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் திறப்பு. திருநெல்வேலி, திண்டுக்கல், நாமக்கல்லில், 327 கோடி ரூபாய் மதிப்பில், 2,404 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அடிக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை