சென்னை: நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்கள் ஓய்வில் இருப்பது அவசியம் என, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qevu6qrl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், 72, தினமும் காலையில், அடையாறு போட் கிளப் மைதானத்தில் நடைபயிற்சி செய்வது வழக்கம். நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு உள்ளது.அதை சமாளித்தபடியே நடைபயிற்சியை முடித்து வீடு திரும்பினார்; பின், வழக்கமான பணிகளை தொடர்ந்தார்.அண்ணா அறிவாலயத்தில், அ.தி.மு.க., முன் னாள் அமைச்சர் அன்வர் ராஜா, தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து தலைசுற்றல் இருந்ததால், சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப் பல்லோ மருத்துவமனையில், ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்.இதய நோய் நிபுணர்கள் உள்ளிட்ட பல்துறை டாக்டர்கள், முதல்வரை பரிசோதித்து, ஆரம்பகட்ட சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, சில பரிசோதனைகளும் முதல்வருக்கு மேற் கொள்ளப்பட்டு உள்ளன.அவரது மனைவி துர்கா, மகனும், துணை முதல்வருமான உதயநிதி உடன் இருந்தனர். அமைச்சர்கள் துரைமுருகன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று முதல்வரிடம் நலம் விசாரித்தனர்.பிரதமர் நரேந்திரமோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், நடிகர் ரஜினி மற்றும் அரசியல் தலைவர்கள், தொலைபேசி வாயிலாக முதல்வரிடம் நலம் விசாரித்தனர்.இதற்கிடையே, அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ சேவை இயக்குநர் பி.ஜி.அனில், நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், 'முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சியில் ஈடுபட்டபோது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.'தலைசுற்றல் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய, தேவையான பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.அப்பல்லோ மருத்துவமனை நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், 'மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், டாக்டர்களின் அறிவுரைப்படி, மேலும் மூன்று நாட் களுக்கு ஓய்வில் இருப்பது அவசியம்.'கூடுதலாக சில மருத்துவ பரிசோதனைகளும் அவருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. மருத்துவமனையில் இருந்தபடியே, அரசு அலுவல்களை அவர் வழக்கம்போல மேற்கொள்வார்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.பிரதமர் மோடி, ராகுல் நலன் விசாரிப்பு
முதல்வர் ஸ்டாலினை பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலன் குறித்து கேட்டறிந்தனர்.