உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழமைக்கு பழமை; புதுமைக்கு புதுமை: மன்னரையே எதிர்த்து கேள்வி கேட்டது மாமதுரை!

பழமைக்கு பழமை; புதுமைக்கு புதுமை: மன்னரையே எதிர்த்து கேள்வி கேட்டது மாமதுரை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட மண் மதுரை' என மாமதுரை விழா துவக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மதுரையில் 4 நாட்கள் மாமதுரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மன்னரையே கண்ணகி கேள்வி கேட்ட இடம் மதுரை. தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட மண் தான் மதுரை. சென்னைக்கு அடுத்து 2வது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது மதுரை. மாபெரும் பண்ணாட்டு விழாவாக சித்திரை திருவிழா நடக்கிறது. திராவிட மாடல் ஆட்சி மதுரைக்கு 2 அமைச்சர்களை கொடுத்துள்ளது. திமுக இளைஞரணி துங்கப்பட்ட இடமும் மதுரை தான்.

நவீன வசதிகள்

பழமை மாறாமல் ஊரை பாதுகாப்பது அவசியம். அதே நேரத்தில் நவீன வசதிகளை தர வேண்டும். பண்பாட்டு விழாவை அனைவரும் கொண்டாட வேண்டும். காலந்தோறும் மதுரை மாநகரம் மாறிய காட்சிகள், மதுரை தமுக்கம் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மாமதுரை விழாவை கொண்டாட வேண்டும். பழமைக்கு பழமையாய், புதுமைக்கு புதுமையாய் இளைஞர்கள் ஊரை போற்றி பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Matt P
ஆக 10, 2024 10:07

இங்கே யாவரும் ஒரே கேள்வியை தான் கேட்கிறார்கள். உன்னை எதிர்த்து கேள்வி கேட்க முடியுமா? கேள்வி கேட்டு அவதூறு ஏற்ப்படுத்தினால் ஈஷெல் போல மடிந்து போவீர்கள். அதை ஏற்கெனவே சொல்லிவிட்டார். மன்னரை எதிர்த்து கேள்வி கேட்க கூடாது என்று அப்பொதெல்லாம் இருந்த மாதிரி தெரியவில்லை. நீதிகேட்டு தாய்ப்பசு ஆராய்ச்சி மணி அடித்தபோது, கன்று குட்டியை கொன்ற மகனை அதே தேரால் கொன்ற மன்னன் அன்று வாழ்ந்த்தாக தானே வரலாறு சொல்கிறது.அவசர மணி ஓன்று அந்த காலத்திலும் இருந்திருக்கிறது. முல்லைக்கே படர்வதற்கு தேர் கொடுத்தான் என்றால் மனிதர்களை மதிக்காமலா இருந்திருப்பார்கள்.


ஆரூர் ரங்
ஆக 08, 2024 22:17

ஆமாம். திராவிட நாடு எனக்கிருக்கிறது என்று கேள்வி கேட்டு அசிங்கமான பதில் கிடைத்த பின் திராவிஷ மன்னர்களிடம் யாராவது கேள்வி கேட்பார்களா?


theruvasagan
ஆக 08, 2024 16:38

மன்னராட்சியில் மக்களுக்கு மன்னனையே கேள்வி கேட்கும் உரிமை இருந்தது. ஆனால் ஜனநாயகத்தில் பரம்பரை குடும்ப வாரிசு ஆட்சியில் அப்படியா.


Narayanan
ஆக 08, 2024 15:31

மன்னரை கேள்வி கேட்டு வந்த மக்கள் சுதந்திரமாக இருந்தார்கள். இன்று இவர்களை கேள்வி கேட்டால் சிறை வாசம்தான் பதில்


TIRUPUR MAYILVAGANAN SIVAKUMAR
ஆக 08, 2024 14:17

உங்களை எதிர்த்து கேள்வி கேட்டால் ...


sridhar
ஆக 08, 2024 13:49

சைவம் வைணவம் தழைத்தோங்கும் ஊர் , கோவில் நகரம் என்றும் சொல்லியிருக்கலாம், யாருக்கோ பயந்து solla வில்லை , ஆக ஆக ஆக ..


தமிழன்
ஆக 08, 2024 13:49

சரி.. சரி..


V. Kanagaraj
ஆக 08, 2024 13:16

அந்த மன்னரை எதிர்த்து கேள்வி கேட்டாள் கண்ணகி. இந்த மன்னரை கேள்வி கேட்டால் என்ன ஆகும்


தமிழன்
ஆக 08, 2024 13:49

குடும்பத்தில் உறுப்பினர் ஆகலாம்.


Minimole P C
ஆக 10, 2024 07:45

Savukku Sankar?


Kumar Kumzi
ஆக 08, 2024 12:33

ஆனாலும் பழைமை போல் துண்டுசீட்டிலும் மாற்றம் இருக்காது மாற்றவும் முடியாது அது உன்னோட தலையெழுத்து


ManiK
ஆக 08, 2024 12:24

மன்னர் இருக்கட்டும்...உங்க ஆட்சிய லேசா கேள்வி கேட்டாலே மண்ண கவ்வ வக்கிரீங்களே?!! நடக்கட்டும் நாடகம்...


தமிழன்
ஆக 08, 2024 13:50

அது மன்னர் ஆட்சி.. இது குடும்ப ஆட்சி.. வித்தியாசம் இருக்குதுல


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை