உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை வருகிறார்

முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை வருகிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை வருகிறார். ஜூலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடக்கவிருந்த நிகழ்ச்சிகள், முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. அவற்றில், உடுமலை, பொள்ளாச்சி நிகழ்வுகளில் பங்கேற்க, அவர் இன்று கோவை வருகிறார். சென்னையில் இருந்து, இன்று மாலை, 5:25 மணிக்கு விமானத்தில் கோவை வரும் அவர், மாலை, 6:50 மணிக்கு காரில் உடுமலை நரசிங்கபுரம் செல்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து, உடுமலையில் இரவு தங்குகிறார். பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்தவர்களை சிறப்பிக்கும் வகையிலும், திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி, பயிற்சி மையம், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகாலிங்கம், பழனிசாமி ஆகியோரது சிலைகளுடன் கூடிய நினைவு மண்டபம், பொள்ளாச்சி நீர்வளத்துறை தலைமைப்பொறியாளர் அலுவலக வளாகத்தில் 1.25 ஏக்கரில், 4 கோடியே 28 லட்சத்து 71,000 ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். பின், கோவை வந்து, விமானத்தில் சென்னை செல்கிறார்.முதல்வர் வருகையை முன்னிட்டு, கோவை மாநகரில், 500 போலீசார், மாவட்டத்தில், 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நகருக்குள் வரும் வெளிமாநில மற்றும் வெளியூர் வாகனங்களை சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஆக 10, 2025 12:53

சிலைகள் நிறுவும் பணத்தில், கூரைகள் இடிந்துவிழும் பள்ளிகளுக்கு தரமான கட்டிடங்களை கட்டித்தரலாம்.


Madhan Mohan Dorai Raj
ஆக 10, 2025 13:16

உண்மை தான். சிலைகளுக்கு பதில் புகைப்படம் போதுமே அவர்களை கவுரவிக்க


VER
ஆக 10, 2025 12:30

அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வேலையை பாருங்கள் மக்கள் பணத்தில் ஊர் ஊராக போய்க் கொண்டு தண்டச் செலவு பண்ணுகிறீர்கள். எங்களிடம் தினப்படி செலவுக்கு பணம் இல்லை நீங்கள் என்னவென்றால் கோடி கோடியாக அரசு பணத்தை விண் அடிக்கிறீர்கள்


Shankar
ஆக 10, 2025 11:03

சிலை திறப்பிற்கு சிறந்த முதல்வர் அதுவும் கருணாநிதி சிலை திறப்பிற்கு சிறந்த முதல்வர் என்ற பட்டமே நம்ம விடியா அரசு முதல்வருக்கு கொடுக்கலாம். கடந்த நான்காண்டு காலமாக இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்.


கோபாலன்
ஆக 10, 2025 08:50

எதாவது நான்கு சாலைகளை செப்பனிட்டு அந்த தலைவர்களின் பெயர்களை சூட்டியிருக்கலாம்.


Shunmugham Selavali
ஆக 10, 2025 07:05

சிலை கட்டி திறப்பதில் காட்டும் ஆர்வத்தை தடுப்பணை கட்டி உபரி நீரை சேமிப்பில், வாய்க்கால்களை தூர்வாரி கடைமடை விவசாயம் செழிக்க பாடு படலாம். உங்களால் முடியாது. நீர் வளத்துக்கு ஒரு துறை மற்றும் அமைச்சர் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார். வாயால் மட்டுமே வடை சுட ஒரு கட்சி, அதற்க்கும் ஓட்டு போட ஏமாந்த மக்கள், பிறகு உங்களுக்கு என்ன கவலை.


Ravi
ஆக 10, 2025 06:43

யாருங்க அவரு நேற்று வரை சைக்கிள்ல போனார் இந்த ஆட்சி வந்தவுடன் ஆடி காரில் போறார்... அவர் தான் கலைஞர் சிலை செய்பவர்


Svs Yaadum oore
ஆக 10, 2025 06:28

முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலைகளை அவர்கள் மர்ம மனிதர்கள் போல அழுக்கு துணியால் மூடி வைத்துள்ளார்கள். லஞ்ச ஊழல் போதை கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தும் விடியல் திராவிடனுங்க, முன்னாள் முதல்வருக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா ??...


Kasimani Baskaran
ஆக 10, 2025 05:31

800 காவலர்கள் பாதுகாப்புக்கா - அந்த அளவுக்கு சட்டம் வேலை செய்யாமல் இருக்கிறதா என்று கேள்வி கேட்டால் அவன் சங்கி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை