புதிய கப்பல் கட்டும் தளங்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சென்னை: 'துாத்துக்குடியில் அமைய உள்ள, இரண்டு கப்பல் கட்டும் தளங்கள், தென்தமிழகத்தின் வளர்ச்சிக்கு, புதியதொரு அடித்தளமாக அமையும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கப்பல் கலையில் தமிழரின் பெருமை மிகு வரலாற்றை, சங்கப் பாடல்கள் சொல்லும். இப்போது, துாத்துக்குடியில், 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில், இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட உள்ளன. தென்தமிழகத்தின் வளர்ச்சிக்கு, புதியதொரு அடித்தளமாக இவை அமையும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.