உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச்செயலர், ஏடிஜிபி ஆஜர்

தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச்செயலர், ஏடிஜிபி ஆஜர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றாத விவகாரத்தில், தலைமைச்செயலாளர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்காக காணொளி மூலம் ஐகோர்ட் மதுரை கிளையில் ஆஜரானார்கள். அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச்செயலர் அவகாசம் கோரிய நிலையில், வழக்கை ஜனவரி 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்.'இந்த ஆண்டு முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை' என, உத்தரவிட்டார்.இந்த உத்தரவை நிறைவேற்றாததால், 'கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்.இதை அவசர வழக்காக டிசம்பர், 3ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'உச்சிப் பிள்ளையார் கோவிலில் மாலை, 6:00 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்' என்றார்.இதை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு டிசம்பர், 4ல் தள்ளுபடி செய்தது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிச., 4ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''கார்த்திகை தீபத்தை தீபத்துாணில் ஏற்ற வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்றார். இந்த அவமதிப்பு வழக்கை கடந்த 9 ம் தேதி மீண்டும் விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் 'தலைமை செயலர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஆகியோர் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தார்.இதன்படி தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் முறையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் ஆஜராகினர். மதுரை போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் நேரில் ஆஜரானார். அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச்செயலர் அவகாசம் கோரினார். தொடர்ந்து வழக்கை அடுத்தாண்டு ஜனவரி 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Srinivasan Pillai M
டிச 19, 2025 16:41

2026 தேர்தலில் நம்முடைய ஒற்றுமையை காட்ட வேண்டும். இந்துக்கள் இல்லாமல் வெற்றி பெற்று விடுவோம் என்ற அவர்களின் கனவுகளை தகர்க்க வேண்டும்.


Guna
டிச 19, 2025 12:34

இது போல நிறைய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் முக்கியமான துறைகளில் மாற்று மதத்தவர்கள் மற்றும் இந்து மத பெயர் போர்வையில் பணிசெய்கிறார்கள். தலை சரியாக இருந்தால்தானே வால் சரியாக இருக்கும்.


Suresh Sivakumar
டிச 19, 2025 06:00

They should be stripped of their posts and demoted like what us done in UP.


Gajageswari
டிச 19, 2025 05:52

செயல் அலுவலருக்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்க வேண்டும். அரசு அவருக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கும்


Rajarajan
டிச 18, 2025 14:26

மாற்று மத ஆஃபீஸ்ர்... சட்டத்தை விட மதத்தை பெரிதாக நினைத்து தடுத்து விட்டனர்


Vijayakumar
டிச 17, 2025 21:52

கோவிலையும், இந்திய பரம்பர்யத்தையும் காப்பாற்ற பாடுபடும் எல்லை சாமி டா. அந்த சாமிகளின் பொற்பாதங்களை தொட்டு வணங்க நாம் அனைவரும் கடன்பட்டவர்கள்.


Pathmanaban
டிச 17, 2025 20:55

தமிழக முதல்வர் ஒரு மதத்திற்கு ஆதரவாக இந்து மதத்தை மட்டமாக நடத்தினால் வரும் தேர்தலில் கட்டாயம் பதில் கிடைக்கும்


Rajarajan
டிச 18, 2025 14:29

இந்துக்கள் ஓட்டு அரசுக்கு.. தேவை இல்லை


Venkatramanks Venkat
டிச 19, 2025 06:37

தேர்தலில் தெரியும்.


Sitaraman Munisamy
டிச 17, 2025 20:22

டேவிட்சன் ஆசீர்வாதம் இனிகோ இதுபோன்ற மாற்று மதம் சார்ந்தவர்கள் இந்து கோவில் விசயத்தை முடிவு செய்யும் இடத்தில் இருபது தான் இவ்வளவு பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம். திட்டமிட்டபடி நடக்கும்


Rajendra Kumar
டிச 17, 2025 19:47

பெரும்பாலான தமிழக இந்துக்கள் இன்னும் சொரணை இல்லாத செம்மறி ஆடுகளாக இருப்பதால் இந்த நிலை. சில இயக்கங்கள் இந்து கலாசாரம் காக்க போராடுவது மகிழ்ச்சி. அவர்களுக்கு தலை வணங்குவோம். இந்த விவகாரத்தால் இந்துக்களிடையே விழிப்புணர்வு பெருமளவு ஏற்படுவது நல்ல விஷயம். ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பிருந்தே திருப்பரங்குன்றம் நம் இந்துக்களுக்கு சொந்தமானது. தர்கா அங்கு வந்து 125-150 வருடங்களாகலாம். திருடர்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை ஒழிக்க வேண்டியது உணர்வுள்ள இந்துக்களின் கடமை.


Anu Sekhar
டிச 17, 2025 22:19

குனிய குனிய தான் கொட்டு கிடைக்கும். உப்பு போட்டு சாப்பிடுங்கள். பிச்சை காசுக்கு ஒட்டு போடுவதை நிறுத்துங்கள்.


NALAM VIRUMBI
டிச 17, 2025 19:08

தொன்மையான பாரத தேச புனித மண்ணின் மத நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் சொங்கிகளை மக்கள் அடையாளம் காண தொடங்கி விட்டனர். வரும் தேர்தலில் அவர்களுக்கு சாவுமணி அடிக்கப்படும். அத்துடன் தீயமுக அழிந்து பட்டுப் போகும். பல்வேறு கால கட்டங்களில் இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்ட தீய சக்திகள் காணாமல் போன வரலாறு நாம் தெரியாததல்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை